அந்த மனசு தான் சார்.. மேட்ச் முடிஞ்ச அப்பறம் ஜப்பான் ரசிகர்கள் செஞ்ச காரியம்.. நெகிழ்ந்துபோன அதிகாரிகள்.. வைரல் வீடியோ..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுகத்தாரில் நடைபெற்று வரும் FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடரின் முதல் போட்டியில் ஜப்பான் நாட்டை சேர்ந்த ரசிகர்கள் செய்த காரியம் பலரையும் நெகிழ செய்திருக்கிறது. இந்நிலையில், இந்த வீடியோ தற்போது சமூக வலை தலங்களில் வைரலாக பரவி வருகிறது.

உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்ட விளையாட்டு கால்பந்து. சாதாரண போட்டிகளுக்கே மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பு இருக்கும். அப்படியிருக்க உலகக்கோப்பை என்றால் சொல்லவா வேண்டும்? உலக மக்களின் பெரும் எதிர்பார்களுக்கு இடையே துவங்க இருக்கிறது இந்த ஆண்டுக்கான கால்பந்து உலகக்கோப்பை. மத்திய கிழக்கு நாடான கத்தாரில் இந்த ஆண்டுக்கான உலகக்கோப்பை கால்பந்து தொடர் நடைபெற்று வருகிறது. கடந்த 2018 ஆம் ஆண்டு ரஷ்யாவில் கால்பந்து உலகக்கோப்பை நடைபெற்ற நிலையில், தற்போது கத்தாரில் துவங்கி நடைபெற்று வருகிறது.
இந்த உலகக்கோப்பை தொடரின் முதல் ஆட்டத்தில் கத்தாரை எதிர்த்து ஈகுவேடார் அணி விளையாடியது. இதில் 2 - 0 என்ற கோல் கணக்கில் ஈகுவேடார் அணி வெற்றிபெற்றது. கத்தார் தலைநகர் தோஹாவில் உள்ள Al-Bayt மைதானத்தில் இந்தப் போட்டி நடைபெற்றது. போட்டி முடிவடைந்த பிறகு, ரசிகர்கள் வெளியேற, போட்டியை காண அங்கு வந்திருந்த ஜப்பானை சேர்ந்த கால்பந்து ரசிகர்கள் கீழே கிடந்த குப்பைகளை அகற்றினர்.
கையில் பிளாஸ்டிக் பையுடன் இருக்கைகளின் கீழே கிடந்த குப்பைகள் மற்றும் தேசிய கொடிகளை ஜப்பானை சேர்ந்த ரசிகர்கள் அகற்றும் வீடியோ இணையத்தில் வெளியாகி பலரையும் நெகிழ செய்துவிட்டது என்றே சொல்லவேண்டும். அந்த வீடியோவில் ஒருவர் "நீங்கள் ஏன் இதனை செய்கிறீர்கள்?" என ஜப்பானை சேர்ந்த ரசிகர் ஒருவரிடம் கேட்கிறார். இதற்கு பதில் அளிக்கும் அவர்,"நாங்கள் ஜப்பானியர்கள். ஒருபோதும் குப்பைகளை அப்படியே விடுவதில்லை. நாங்கள் அந்த இடத்தை மதிக்கிறோம்" என்கிறார்.
இதுவரையில் இந்த வீடியோவை 2 லட்சத்திற்கும் அதிகமானோர் பார்த்திருக்கின்றனர். மேலும், ஜப்பான் ரசிகர்களின் இந்த செயலை நெட்டிசன்கள் பாராட்டியும் வருகின்றனர்.
Also Read | அர்ஜென்டினாவை வீழ்த்திய சவூதி அரேபியா... மக்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த சவூதி அரசர் சல்மான்..!

மற்ற செய்திகள்
