'கொள்ளையடித்த எல்லா மெடிக்கல் ஷாப்பிலும்...' திருட்டு போனது 'அந்த' மாத்திரை மட்டும் தான்...! 'அந்த மாத்திரைக்கு' பின்னாடி இருந்த கதை...! - அதிர வைத்த வாக்குமூலம்...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சென்னை சைதாப்பேட்டையில் இயங்கும் மருந்துக் கடை ஒன்றில் கடந்த 29-ஆம் தேதி பணம் மற்றும் மருந்துகள் கொள்ளையடிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து அதே ரிதியில் குமரன் காலனி, மேற்கு மாம்பலம் எத்திராஜ் நகரிலும் மருந்து கடைகளில் கொள்ளை சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வந்தது.

இந்த சம்பவங்கள் தொடர்பாக காவல்நிலையத்தில் புகார் அளிக்கபட்டு வந்ததில், ஒரேவிதமான முறையில் பல மருந்துக்கடைகளில் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் காவல்துறையினருக்கு வியப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் இந்த தொடர் கொள்ளை குறித்து, சைதாப்பேட்டை உதவி ஆணையர் அனந்தராமன் தலைமையிலான போலீசார் சம்பந்தப்பட்ட மருந்து கடைகள் மற்றும் அதன் வெளிப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்தனர்.
சிசிடிவி வீடியோ காட்சிகள் மற்றும் தொடர் விசாரணையின் முடிவில், ஆதம்பாக்கத்தைச் சேர்ந்த பிங்கி என்கிற அருண்குமார் என்ற இளைஞர் கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்தது.
மேலும், அருண்குமாரை போலீசார் கைது செய்து காவலர்கள் விசாரித்தபோது, அந்த இளைஞர் சர்க்கரை நோயாளிகள் பயன்படுத்தக்கூடிய ஒரு குறிப்பிட்ட மாத்திரையை 8 முதல் 10 வரை எடுத்து நீரில் கரைத்து, சிரஞ்சு மூலம் உடலில் செலுத்தி போதை ஏற்றிக்கொள்வதை வழக்கமாக வைத்திருந்ததாக கூறியுள்ளார். அதன் காரணமாக தான் அருண்குமார், மருந்து கடைகளில் பணத்தை மட்டுமல்லாமல் ஒரே வித அந்த மாத்திரையையும் கொள்ளையடித்துள்ளான்.
அதை தொடர்ந்து வேறு சிலருக்கும் மாத்திரைகளை விற்றதும் விசாரணையில் தெரியவந்ததுள்ளது. அதேபோல் அருண்குமார் திருடுவதற்குப் பயன்படுத்திய இருசக்கர வாகனமும் திருடப்பட்டது என்பதை அறிந்த போலீசார் அதை பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி அருண்குமாரை, காவல்துறையினர் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைத்தனர்.

மற்ற செய்திகள்
