'இந்த மாத்திரையோட விலை ₹103...' '4 நாள்ல நல்ல ரிசல்ட் கிடைக்குது...' அவசரகால பயன்பாட்டின் கீழ் ஒப்புதல் பெற்ற நிறுவனம்...!
முகப்பு > செய்திகள் > இந்தியாகொரோனா வைரஸிற்கு மும்பையை சேர்ந்த கிளென்மார்க் பாராமெடிக்கல்ஸ் நிறுவனம் மருந்து தயாரித்து அதன் அங்கீகாரத்தையும் பெற்றுள்ளது.

உலகெங்கிலும் பரவி வரும் கொரோனா வைரஸிற்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க அனைத்து உலக நாடுகளும் முயற்சி செய்து வருகிறது. ஒரு சில நாடுகள் கொரோனா வைரஸை முழுமையாக கட்டுப்படுத்த மருந்து இல்லையென்றாலும் நோயாளிகளின் உடல் நலத்தை அதிகரிக்கும் மருந்துகளை தயாரித்து நோயாளிகளுக்கு கொடுத்தும் வருகின்றனர்.
இந்நிலையில் மும்பையை சேர்ந்த கிளென்மார்க் பாராமெடிக்கல்ஸ் நிறுவனம் கொரோனா வைரஸ் மருந்து உற்பத்தி மற்றும் விற்பனைக்கான அனுமதியை இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஆணையம் (Drugs Controller General of India (DCGI).நேற்று வழங்கியுள்ளது.
ஃபேபி ப்ளு என்ற பிராண்டின் மூலம் தயாரிக்கப்பட்ட கீழ் ஃபேவிஃபிராவிர் என்ற மாத்திரையே கொரோனா நோயாளிகளுக்கு அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் இந்த ஒரு மாத்திரையின் விலை ரூ.103க்கு விற்கப்படுகிறது. மேலும் இந்த மாத்திரையை சர்க்கரை நோய், ஹைபர்டென்ஷன் உள்ள கோவிட் நோயாளிகளுக்கும் அளிக்கலாம் எனவும் எவ்வித பாதிப்பும் ஏற்படாது எனவும் நிரூபிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கூறிய கிளென்மார்க் பாராமெடிக்கல் நிறுவனத்தின் தலைவர் கிளென் சல்தானா, ஃபேவிஃபிராவிர் என்ற மாத்திரையை குறைந்த அளவு கொரோனா வைரஸ் பாதிப்புள்ளவர்களிடத்தில் கொடுத்து பார்த்ததில் 88 சதவிகிதம் வரை வெற்றி கிடைத்துள்ளது.
தற்போது இந்தியாவில் முன்னெப்போதும் இல்லாத வகையில் அழுத்தம் உள்ளது, மேலும் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வரும் நிலையில், 'அவரசகால பயன்பாடு' என்பதன் கீழ் அனுமதி கிடைத்திருப்பது ஆறுதலை தருகிறது எனக் கூறியுள்ளார். இந்த மருந்து கொடுத்து நான்கு நாட்களுக்குள் உடலில் நல்ல முன்னேற்றத்தை பார்க்க முடிகிறது என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும் கொரோனா பாதித்தவர்களுக்கு முதல் நாளில் சுமார் 1800 மி.கி. மாத்திரைகளை இரு வேளை அளிக்கப்படுவதாகவும், இரண்டாம் நாள் முதல் அடுத்த 13 நாள்களுக்கு தினமும் 800 மி.கி மாத்திரை இரண்டு எடுத்துக் கொண்டால் போதுமானது எனவும் குறிப்பிடுகின்றனர். குறிப்பாக மாத்திரை உட்கொள்ளும் நோயாளிகளின் முழு ஒப்புதலை கையொப்பம் வாயிலாக பெற்ற பிறகே, அவர்களுக்கு இந்த மருந்து வழங்கப்படும்.

மற்ற செய்திகள்
