'கொரோனாவுக்கான' மருந்து இந்த 'விலங்கிடம்' இருக்கிறது... 'நம்பிக்கையளிக்கும் ஆய்வு முடிவு...' 'டெக்சாஸ்' ஆராய்ச்சியாளர்கள் 'கண்டுபிடிப்பு...'

முகப்பு > செய்திகள் > உலகம்

By Suriyaraj | May 08, 2020 01:07 PM

கொரோனாவுக்கான எதிர் உயிரணுக்கள் லாமா எனப்படும் விலங்கிடம் அதிகம் இருப்பதாக டெக்சாஸ் பல்லைக்கழக விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

scientists look to llama in search for COVID-19 treatment

ஒட்டகத்தின் குட்டி போல இருக்கும் இந்த லாமா விலங்கு கொரோனாவுக்கான மருந்தைக் கொண்டிருக்கிறது என்று விஞ்ஞானிகள் நம்புகிறார்கள். இது ஒட்டகத்தின் வகையைச் சேர்ந்த வளர்ப்புப் பிராணியாகும். தென் அமெரிக்க நாடுகளில் சரக்குகளை எடுத்துச் செல்வதற்காக விவசாயிகள் அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறார்கள். லாமாக்களின் உடலில் ஒருவகையான எதிர் உயிரிகள் இயற்கையாகவே இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த எதிர் உயிரிகள் கொரோனா பரவுவதைத் தடுக்கும் ஆற்றல் கொண்டவை என அமெரிக்காவின் டெக்ஸாஸ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்திருக்கிறார்கள். எஸ் புரோட்டின் எனப்படும் நீட்சி மூலமாகத்தான் கொரோனா வைரஸானது மனிதர்களின் செல்களுக்குள் நுழைகின்றன.

லாமாக்களில் உள்ள எதிர் உயிரிகள் வைரஸ்களில் உள்ள இந்த நீட்சிகளைத் தடுக்கும் ஆற்றல் கொண்டவை என விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

இந்த ஆய்வு முடிவு, செல் என்ற அறிவியல் இதழில் வெளியாகி உள்ளது. தற்போது இந்த ஆய்வு நம்பிக்கையளித்தாலும், முதலில் விலங்குகளிடம் சோதனை செய்து, பின்னர் மனிதர்களுடமும் பரிசோதனை செய்த பின்னரே நடைமுறைக்கு கொண்டுவர முடியும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.