யாரெல்லாம் ஹைட்ராக்சி குளோரோகுயின் மாத்திரையை சாப்பிடக் கூடாது...? அதுவும் 'இவங்க'லாம் நோ சான்ஸ்...! - மத்திய சுகாதாரத்துறை அறிவிப்பு...!
முகப்பு > செய்திகள் > இந்தியாகொரோனா தாக்கம் அதிகம் உள்ள நோயாளிகளுக்கு ஹைட்ராக்சி குளோரோகுயின் மருந்தை பயன்படுத்த வேண்டாம் என மத்திய சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.
உலகம் முழுவதும் பரவிய கொரோனா வைரஸ் பல நாடுகள் இன்றளவும் அதன் தாக்கலிருந்து மீள முடியாமல் தவிக்கின்றன. இதுவரை முழு பரிசோதனை முடிந்து தடுப்பூசிகள் கிடைக்காததே இதற்கு முக்கிய காரணம். இந்நிலையில் கொரோனா வைரஸின் தாக்கத்தை கட்டுப்படுத்த பல நாடுகள் வெவ்வேறு மருந்துகளை பயன்படுத்தி வருகிறது.
அதேபோல் அமெரிக்காவில் கொரோனா பரவ தொடங்கியது முதல் அமெரிக்க அதிபர் டிரம்ப் ஹைட்ராக்சி குளோரோகுயின் மருந்தை செய்தியாளர் பேட்டியிலேயே பரிந்துரைத்தார். மேலும் இந்த மருந்தை இந்தியாவிடம் இருந்தும் இறக்குமதி செய்ததும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், கொரோனா சிகிச்சைக்கு ஹைட்ராக்சி குளோரோகுயின் மாத்திரைகளை பயன்படுத்துவதற்கான வழிகாட்டுதல்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அவ்வறிக்கையில் கொரோனா வைரஸின் தாக்கம் குறைவாகவும் அல்லது நடுத்தரமாக இருக்கும் நோயாளிகளுக்கு மட்டுமே ஹைட்ராக்சி குளோரோகுயின் பயன்படுத்த வேண்டும் எனவும், தீவிர பாதிப்பு நோயாளிகளுக்கு அதை கொடுப்பதை தவிர்க்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் இவ்வாறு பிரிக்கப்பட்ட குறைவான அல்லது நடுத்தரமாக பாதிப்பு இருக்கும் நோயாளிகளில் 60 வயதுக்கு குறைவானவர்கள், உயர் ரத்தழுத்தம், நீரிழிவு, நீடித்த நுரையீரல், சிறுநீரகம், கல்லீரல் நோய், மூளை ரத்தக்குழாய் பாதிப்பு மற்றும் உடல்பருமன் பிரச்னை உடையவர்களுக்கு தீவிர மருத்துவ மேற்பார்வையில் ஹைட்ராக்சி குளோரோகுயின் மாத்திரையை பயன்படுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.
மேலும் நடுத்தர பாதிப்பு நோயாளிகளுக்கு இசிஜி பரிசோதனைக்குப் பின்பே ஹைட்ராக்கி குளோரோகுயினை பயன்படுத்த வேண்டும். ஏனென்றால் இந்த ஹைட்ராக்சி குளோரோகுயின் மாத்திரை அதிக பக்க விளைவுகளை ஏற்படுத்தலாம் என மத்திய சுகாதாரதுறை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது