'ரூஃப்ல இருந்து வந்த வெளிச்சம்...' 'கீழ மிளகாய் பொடிய கொட்டிட்டு ஆள் எஸ்கேப்...' - காலைல கடைய திறக்க வந்தவருக்கு 'ஷாக்' கொடுத்த மர்ம நபர்...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சென்னை கேகே நகர் பகுதியை சேர்ந்தவர் டேவிட். இவர் அந்தப் பகுதில் வியாபாரி சங்க தலைவராக பொறுப்பு வகிக்கிறார். இவர் கே.கே.நகர் பகுதியில் கடந்த 43 ஆண்டுகளாக மளிகைக் கடை நடத்தி வருகிறார்.
![chennai Breaking roof grocery looting one lakh 90 thousand chennai Breaking roof grocery looting one lakh 90 thousand](http://tamil.behindwoods.com/news-shots-tamil-news/images/tamilnadu/chennai-breaking-roof-grocery-looting-one-lakh-90-thousand.jpg)
இந்நிலையில் நேற்று (02-08-2021) இரவு மர்ம நபர் டேவிட்டின் மளிகை கடையின் மேல் கூரையை உடைத்து உள்ளே இறங்கி கல்லா பெட்டியில் இருந்த ஒரு லட்சத்து 90 ஆயிரம் ரூபாயை அபேஸ் செய்துள்ளார். அதோடு மட்டுமல்லாமல், அடையாளம் கண்டுபிடிக்காமல் இருக்க மிளகாய் பொடியையும் தூவிவிட்டு சென்றுள்ளார்.
இன்று (03-08-2021) காலை எப்போதும் போல் டேவிட் தன்னுடைய மளிகை கடையை திறப்பதற்காக சென்றுள்ளார். அப்போது கடை திறந்து இருப்பதை கண்டு கடும் அதிர்ச்சி அடைந்துள்ளார். மேலும் உடனடியாக அருகில் இருந்த காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தினர். மளிகை கடையில் சிசிடிவி கேமரா இல்லாத காரணத்தினால் அருகில் சிசிடிவி காட்சிகளை போலீசார் சேகரித்து வருகின்றனர்.
இந்த கொள்ளை சம்பவத்தில் ஒருவர் மட்டும் கொள்ளையடித்து சென்றார்களா அல்லது ஏற்கனவே திட்டமிட்டு கும்பலாக கொள்ளையடித்தார்களா என போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
![](https://www.behindwoods.com/images/spacer.gif)
மற்ற செய்திகள்
![](https://www.behindwoods.com/images/spacer.gif)