'அந்த மாத்திரை தான் காரணம்... 'அமெரிக்காவுக்கு வந்த அடுத்த தலைவலி...' 'வரலாறு நம்மை மன்னிக்காது...' அதிர்ச்சியளிக்கும் ஆய்வு முடிவுகள்...!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Issac | Apr 22, 2020 12:12 PM

அமெரிக்காவில் ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்துகளால் அதிகம் மக்கள் இறந்துள்ளதாக வெளிவந்த செய்தி அமெரிக்க அதிபரை மேலும் சங்கடத்தில் ஆழ்த்தியுள்ளது.

The study concluded that most people died of hydroxychloroquine

உலக நாடுகளில் கொரோனா வைரசால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடு அமெரிக்கா. கொரோனா வைரஸிற்கு மருந்து இல்லாத சூழலில் ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்து தான் ஒரே தீர்வு என அமெரிக்க அதிபர் டிரம்ப் வேகமாக இந்தியாவிடமும் இறக்குமதி செய்து 30 மில்லியன் டோஸ்களை இருப்பில் வைத்துள்ளார். ஆனால் தற்போது அமெரிக்காவில் பலி எண்ணிக்கை அதிகமாவதற்கு காரணம் ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் தான் என ஆய்வுகள் தெரிவிக்கிறது.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப் 'எனக்கு ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் பற்றி ஒன்றும் தெரியவில்லை, சில நல்ல ரிப்போர்ட்களும் உள்ளன, ஆனால் தற்போது வெளிவந்தது நல்ல ரிப்போர்ட் அல்ல, இது தொடர்பாக நாம் ஒரு கட்டத்தில் முடிவெடுப்போம்' என தெரிவித்தார்.

தேசிய சுகாதார நிறுவனங்கள் மற்றும் வர்ஜீனியா பல்கலைக்கழகம் நிதியளித்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், கொரோனா தொற்று உள்ள 368 நோயாளிகளில் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்து எடுத்துக்கொண்ட 97 நோயாளிகளுக்கு 27.8% இறப்பு விகிதம் இருந்தது. மேலும் மருந்து எடுத்துக் கொள்ளாத 158 நோயாளிகளுக்கு 11.4% இறப்பு விகிதம் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் என்.ஐ.எச். தனது அறிக்கையில், ஹைட்ராக்சிகுளோரோகுய்ன் அளித்தால் நோயாளியை மருத்துவர்கள் உன்னிப்பாக கண்காணித்து மோசமான விளைவுகள் பக்க விளைவுகள் ஏற்படுகிறதா என்பதை தீர்மானிக்க வேண்டும் எனவும், ஹைட்ராக்சிகுளோரோகுயின் மற்றும் அசித்ரோமைசின் ஆகியவற்றை சேர்த்து கொடுப்பதை கண்டிக்கின்றனர். ஏனெனில் இதனால் நச்சுத்தன்மை அதிகரிக்கலாம் என்று எச்சரித்துள்ளனர்.

அதை தொடர்ந்து, அமெரிக்காவின் காங்கிரஸ் உறுப்பினர் பில் பாஸ்க்ரெல், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மீது பாய்ந்துள்ளார். இது பற்றி அவர் குறிப்பிடுகையில், டொனால்ட் டிரம்ப், அறிவியலை விட அரசியலுக்கு முக்கியத்துவம் கொடுத்ததன் விளைவை சந்திக்கிறோம் என்று சாடியுள்ளார்.

எவ்வித விஞ்ஞான பூர்வமான ஆய்வறிக்கையும் இல்லாமல்  ஹைட்ராக்சிகுளோரோகுய்ன் பயன்பாடு தான் உகந்தது என ட்ரம்ப் கூறிவருகிறார். இது அவரது நிர்வாகத்தின் மீதான வெடிகுண்டு தாக்குதலாகும். ஆதாரங்களின் அடிப்படையிலான விஞ்ஞானமே அமெரிக்கா தற்போது சந்திக்கும் நெருக்கடியிலிருந்து மீள வழி. அறிவியலை நம்பாமல் அரசியலை நம்பினால் நாம் இன்னமும் தேவையற்ற மரணங்களை சந்திக்க வேண்டியதுதான், வரலாறு நம்மை மன்னிக்காது என்று காங்கிரஸ் உறுப்பினர் பில் பாஸ்க்ரெல் தெரிவித்துள்ளார்.