திடீரென டிரெண்டாகும் ‘ஆபாச’ வீடியோ.. செம ‘அதிர்ச்சியில்’ சோஷியல் மீடியா.. உடனடியாக பதவியை ராஜினாமா செய்த பாஜக தலைவர் கே.டி.ராகவன்..! என்ன நடந்தது..?
முகப்பு > செய்திகள் > தமிழகம்ஆபாச வீடியோ வெளியாகி சர்ச்சையான நிலையில், தமிழக பாஜக பொதுச்செயலாளர் பொறுப்பை கே.டி.ராகவன் ராஜினாமா செய்துள்ளார்.

தமிழக பாஜக பொதுச் செயலாளராக கே.டி.ராகவன் பொறுப்பு வகித்துவந்தார். இந்த நிலையில், இன்று (24.08.2021) அவர் மீது பாலியல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனைத் தொடர்ந்து தனது பொதுச்செயலாளர் பொறுப்பை ராஜினாமா செய்வதாக கே.டி.ராகவன் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்ட அவர், ‘தமிழக மக்களுக்கும், கட்சியினருக்கும் நான் யாரென்று தெரியும். என்னைச் சார்ந்தவர்களுக்கும் நான் யார் என்று தெரியும். நான் 30 வருடங்களாக எந்த ஒரு பிரதிபலனும் இன்றி பணியாற்றி வருகிறேன். இன்று காலை சமூக வலைதளங்களில் என்னைப் பற்றி ஒரு வீடியோ வெளிவந்ததை அறிந்தேன்.
என்னையும் என் கட்சியையும் களங்கப்படுத்த இந்த வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. இன்று மாநிலத் தலைவர் அண்ணாமலையைச் சந்தித்து ஆலோசனை செய்தேன். நான் என்னுடைய கட்சிப் பொறுப்பை ராஜினாமா செய்கிறேன். குற்றச்சாட்டுகளை மறுக்கிறேன். சட்டப்படி சந்திப்பேன். தர்மம் வெல்லும்’ என கே.டி.ராகவன் பதிவிட்டுள்ளார். இந்த சம்பவம் தற்போது தமிழ்நாட்டில் பரபரப்பை கிளப்பி உள்ளது.
என்னையும் என்கட்சியையும் களங்கபடுத்த இந்த வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.
இன்று மரியாதைக்குரிய மாநிலத்தலைவர் திரு.@annamalai_k அவர்களை சந்தித்து ஆலோசனை செய்தேன்.
நான் என்னுடைய கட்சி பொறுப்பை ராஜினாமா செய்கிறேன்.
குற்றச்சாட்டுகளை மறுக்கிறேன்.
சட்ட படி சந்திப்பேன்.
தர்மம் வெல்லும்!
2/2
— K.T.Raghavan (@KTRaghavanBJP) August 24, 2021

மற்ற செய்திகள்
