"ஏதோ ஜாலியா சொல்றாரு-னு நெனச்சேன்.. சீரியஸா இருத்திருக்காரு மனுஷன்".. ADK-வை கலாய்த்த விக்ரமன்😅.. EXCLUSIVE.!
முகப்பு > செய்திகள் > தமிழகம்பிக்பாஸ் சீசன் 6-ன் போட்டியாளர்களான விக்ரமன், ஷிவின், ராம் மற்றும் ADK ஆகியோர் நம்முடைய சேனலுக்கு பிரத்யேக நேர்காணல் அளித்திருக்கின்றனர்.

தமிழில் சிறந்த ரியாலிட்டி ஷோக்களில் ஒன்றாக இருக்கும் நிகழ்ச்சி பிக் பாஸ். தமிழில் பிக் பாஸ் நிகழ்ச்சி, இதுவரை மொத்தம் ஆறு சீசன்கள் முடிவடைந்துள்ளது. அந்த வகையில் இதன் ஆறாவது சீசன் கடந்த சில வாரங்களுக்கு முன்பாக முடிவுக்கு வந்திருந்தது.
மொத்தம் 106 நாட்கள் நடந்த இந்த நிகழ்ச்சியின் ஃபினாலேவிற்கு அசிம், ஷிவின் மற்றும் விக்ரமன் ஆகியோர் முன்னேறி இருந்தனர். மொத்தமுள்ள 21 போட்டியாளர்களில் இருந்து இந்த மூன்று பேர் இறுதிச்சுற்றுக்கு முன்னேறி இருந்த சூழலில், ஆறாவது பிக் பாஸ் சீசனின் டைட்டில் வின்னராக அசிம் தேர்வாகி இருந்தார். இதனைத் தொடர்ந்து இரண்டாவது இடத்தை விக்ரமனும், மூன்றாவது இடத்தை ஷிவினும் பிடித்திருந்தனர்.
பிக்பாஸ் சீசன் 6
தொடர்ந்து பிக் பாஸ் குறித்த பேச்சுகள் இணையத்தில் பரவலாக இருந்து வருகிறது. இதற்கு காரணம் பிக் பாஸ் போட்டியாளர்கள் பல்வேறு இன்டர்வியூகள் கொடுத்து வருவதும், பல இடங்களில் செல்லும் போது மக்கள் அவருக்கு கொடுக்கும் அமோக வரவேற்பும் ஆகும். பிக்பாஸ் சீசன் 6-ன் போட்டியாளர்களுக்கு என சோசியல் மீடியாவில் ரசிகர் படையும் உருவாகி, போட்டி குறித்தும் தங்களுக்கு பிடித்த போட்டியாளர்களின் பங்களிப்பு குறித்தும் விவாதங்கள் நடத்தி வந்தனர்.
இந்த சூழ்நிலையில் பிக்பாஸ் சீசன் 6-ன் போட்டியாளர்களான விக்ரமன், ஷிவின், ராம் மற்றும் ADK ஆகியோர் நம்முடைய சேனலுக்கு பிரத்யேக நேர்காணல் ஒன்றை அளித்திருக்கின்றனர். பிக்பாஸ் வீட்டிற்குள் ஏற்பட்ட தங்களுக்கிடையேயான நட்பு குறித்தும், 106 நாட்கள் பிக்பாஸ் வீட்டிற்குள் கிடைத்த அனுபவங்கள் பற்றியும் மனம் திறந்து பேசியிருக்கின்றனர்.
ஊர்க் கிழவி
அதேபோல, ADK உருவாக்கி வரும் ஊர் கிழவி பாடல் குறித்தும் பேச்சு எழுந்தது. அப்போது ADK," பிக்பாஸ் வீட்டுக்குள்ளேயே விக்கு கிட்ட இத பத்தி சொன்னேன். இப்படி ஒரு ஐடியா இருக்கு. வெளியே போய் பிளான் பண்ணனும்னு" என்றார். இதற்கு பதில் அளித்து பேசிய விக்ரமன்,"பிக்பாஸ் வீட்டுக்குள்ள இருந்தப்பவே இதை பத்தி சொன்னாரு. ஏதோ விளையாட்டுக்கு சொல்றாருனு நெனச்சேன். ஆனா உண்மையாவே செஞ்சிருக்காரு" எனத் தெரிவித்தார். இதனையடுத்து பேசிய ADK ஊர் கிழவி பாடல் உருவான விதம் குறித்தும் அதில் பங்கேற்ற நடன கலைஞர்கள் குறித்தும் பேசியிருக்கிறார். இதனிடையே பாடலின் சில வரிகளை அவர் பாடி அசத்தியிருக்கிறார்.

மற்ற செய்திகள்
