"ஆமா என்ன அது".. RHYMES பாடும்போது GP முத்துவிற்கு வந்த டவுட்.. கியூட் தலைவரேன்னு கொண்டாடும் ரசிகர்கள்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்பிக்பாஸ் வீட்டுக்குள் மைனா நந்தினியுடன் இணைந்து Rhymes பாடியுள்ளார் GP முத்து.
![GP Muthu has sung rhymes along with Myna Nandhini in BB6 GP Muthu has sung rhymes along with Myna Nandhini in BB6](http://tamil.behindwoods.com/news-shots-tamil-news/images/tamilnadu/gp-muthu-has-sung-rhymes-along-with-myna-nandhini-in-bb6.jpg)
கடந்த வாரம் துவங்கிய பிக்பாஸ் சீசன் 6 பல்வேறு திருப்பங்களுடன் சென்றுகொண்டிருக்கிறது. தினந்தோறும் பல்வேறு வேடிக்கையான விவாதங்கள், சுவாரஸ்யமான டாஸ்க்குகள் என பிக்பாஸ் வீடு களைகட்டியுள்ளது. இதன் காரணமாக மக்கள் டிஸ்னி + ஹாட்ஸ்டார் தளத்தில் 24 மணி நேரமும் பிக்பாஸ் 6 வது சீசன் நிகழ்ச்சியை ஆர்வத்துடன் கண்டு ரசித்து வருகின்றனர்.
இந்த சீசனில் யூடியூபர் ஜி.பி.முத்து, இசைக் கலைஞரான அசல் கோலார், சீரியல் நடிகர் அசீம், திருநங்கை ஷிவின் கணேசன், டான்ஸ் மாஸ்டர் ராபர்ட், மாடல் ஷெரினா, கிரிக்கெட் வீரர் ராம் ராமசாமி, ராப் சிங்கரான ஆர்யன் தினேஷ் (ADK), தொகுப்பாளினி ஜனனி, KPY அமுதவாணன், VJ மகேஸ்வரி, VJ கதிரவன், சத்யா சீரியல் நடிகை ஆயிஷா, ஈரோடு டிக்டாக் பிரபலம் தனலட்சுமி, நடிகை ரச்சிதா மகாலட்சுமி, ஐஸ்வர்யா ராஜேஷின் சகோதரரான மணிகண்டன் ராஜேஷ், மெட்டி ஒலி ஷாந்தி அரவிந்த், VJ விக்ரமன், மாடல் குயின்சி ஸ்டான்லி, சிங்கப்பூர் மாடல் நிவாஷினி, மைனா நந்தினி உள்ளிட்ட 21 நபர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
பிக்பாஸ் வீட்டுக்குள் எப்போதும் ஜாலியாக வலம்வரும் GP முத்து தற்போது வீட்டின் கேப்டனாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். கலகலப்பான பேச்சும், வெள்ளேந்தியான குணமும் GP முத்துவுக்கு ஏராளமான ரசிகர்களை பெற்றுக்கொடுத்திருக்கிறது. இதனாலேயே பிக்பாஸ் வீட்டுக்குள் அவர் செய்யும் வினோதமான நடவடிக்கைகள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுவருகின்றன.
குறிப்பாக அவருடைய வட்டார வழக்கு பேச்சுகள் இணையதளங்களில் அதிகளவில் ட்ரெண்ட் ஆகியும் வருகின்றன. உதாரணமாக அவருடைய "I Dont Care" பிரயோகம் சமீப நாட்களில் இணையத்தில் வைரலாக பேசப்பட்டது. இந்நிலையில் தான் மைனாவுடன் இணைந்து ரைம்ஸ் பாடியிருக்கிறார் முத்து.
வீட்டுக்குள் உள்ள கேமராவில் மைனா நந்தினியும், GP முத்துவும் டிவிங்கிள் டிவிங்கிள் லிட்டில் ஸ்டார் ரைம்ஸை பாடுகின்றனர். அப்போது இடையில் GP முத்துவிற்கு வரிகள் மறந்துவிட "அது என்னது?" என தனது பாணியில் கேட்கிறார். மைனா அதனை சொல்ல, பின்னர் இருவரும் இணைந்து பாடுகின்றனர். இறுதியில் தனது ஸ்டைலில் ஐ லவ் யூ சொல்லிவிட்டு இருவரும் சிரித்தபடி செல்கின்றனர். இதனிடையே இந்த வீடியோ GP முத்துவின் ரசிகர்களிடையே தீயாய் பரவி வருகிறது.
Twinkle hu uncle hu 😂😂😂 Thalaiver Version #GPMuthu #GPMuthuArmy #BiggBoss #BiggBossTamil #BiggBossTamil6 pic.twitter.com/EJ5QjjiVO5
— GP Muthu Army (@drkuttysiva) October 18, 2022
![](https://www.behindwoods.com/images/spacer.gif)
மற்ற செய்திகள்
![](https://www.behindwoods.com/images/spacer.gif)