மகனுக்காக தான் வெளியேறினாரா GP முத்து ? இப்போ எப்படி இருக்கார்? பரபரப்பு பின்னணி! BIGG BOSS 6 TAMIL

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Madhavan P | Oct 23, 2022 11:38 AM

பிக்பாஸ் வீட்டில் இருந்து GP முத்து வெளியேறிய நிலையில், அவரது மகன் விஷ்ணுவின் உடல்நிலை குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது.

BiggBoss6 Tamil Contestant GP Muthu son Vishnu Health update

கடந்த வாரம் துவங்கிய பிக்பாஸ் சீசன் 6 தினந்தோறும் நடைபெறும் பல்வேறு விதமான வேடிக்கைகள், கிண்டல் நிறைந்த விவாதங்கள், டாஸ்க்குகள் என களைகட்டத் துவங்கியுள்ளது. பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை போலவே இந்த சீஸனும் டிஸ்னி + ஹாட்ஸ்டார் தளத்தில் 24 மணி நேரமும் ஒளிபரப்பாகி வருகிறது.

இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில், யூடியூபர் ஜி.பி.முத்து, இசைக் கலைஞரான அசல் கோலார், சீரியல் நடிகர் அசீம், திருநங்கை ஷிவின் கணேசன், டான்ஸ் மாஸ்டர் ராபர்ட், மாடல் ஷெரினா, கிரிக்கெட் வீரர் ராம் ராமசாமி, ராப் சிங்கரான ஆர்யன் தினேஷ் (ADK), தொகுப்பாளினி ஜனனி,  KPY அமுதவாணன், VJ மகேஸ்வரி, VJ கதிரவன், சத்யா சீரியல் நடிகை ஆயிஷா, ஈரோடு டிக்டாக் பிரபலம் தனலட்சுமி, நடிகை ரச்சிதா மகாலட்சுமி, ஐஸ்வர்யா ராஜேஷின் சகோதரரான மணிகண்டன் ராஜேஷ், மெட்டி ஒலி ஷாந்தி அரவிந்த், VJ விக்ரமன், மாடல் குயின்சி ஸ்டான்லி, சிங்கப்பூர் மாடல் நிவாஷினி, மைனா நந்தினி உள்ளிட்ட 21 நபர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றிருந்தனர்.

BiggBoss6 Tamil Contestant GP Muthu son Vishnu Health update

GP முத்துவின் வெள்ளேந்தியான பேச்சும், அவரது குறும்பு மிக்க நடவடிக்கைகளும் வீட்டை மேலும் சுவாரஸ்யமாக்கியது என்றே சொல்லவேண்டும். இதனிடையே அவர் குறித்த வீடியோக்கள் சோசியல் மீடியாவில் தினந்தோறும் ட்ரெண்ட் ஆகி வருகின்றன. அதே நேரத்தில் தனது குடும்பத்தினரை விட்டு பிரிந்து இருக்கமுடியவில்லை என தெரிவித்துவந்த GP முத்து, பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற இருப்பதாக கூறியிருந்தார்.

இந்நிலையில், நேற்று பிக்பாஸ் போட்டியில் இருந்து வெளியேறுவதாக கமலிடம் தெரிவித்துவிட்டு வீட்டை விட்டு வெளியே சென்றிருக்கிறார் GP முத்து. தனது மகனுக்கு உடல்நிலை சரியில்லை எனவும் அதனால் தான் வீட்டுக்கு செல்ல வேண்டும் எனவும் அவர் தெரிவித்திருந்தார்.

BiggBoss6 Tamil Contestant GP Muthu son Vishnu Health update

இந்நிலையில், முத்துவின் மகன் விஷ்ணுவின் உடல்நிலை குறித்த தகவல் வெளியாகி உள்ளது. விஷ்ணுவிற்கு கடந்த 20 நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்ததாகவும், இந்நிலையில் அவர் நலமடைந்திருப்பதாகவும் முத்துவின் நெருங்கிய வட்டாரங்களில் இருந்து தகவல்கள் கிடைத்திருக்கின்றன. மேலும், வாரம் ஒருமுறை மருத்துவர் விஷ்ணுவின் உடலை கவனித்துக்கொள்ள வீட்டுக்கு வருவதாகவும் தெரிகிறது. இதனிடையே, GP முத்து அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்களையும் தெரிவித்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தனது மகனுக்கு உடல் நிலை சரியில்லை என முத்து வெளியேறியிருந்த நிலையில், அவரது மகன் உடல்நிலை சீராகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருப்பது, ரசிகர்களை ஆசுவாசப்படுத்தியுள்ளது.

Tags : #GP MUTHU #BIGGBOSSTAMIL #BIGGBOSS6

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. BiggBoss6 Tamil Contestant GP Muthu son Vishnu Health update | Tamil Nadu News.