'முடிவுக்கு வந்த 4 ஆண்டுக்கால சிறைவாசம்'... 'விடுதலையானார் சசிகலா'... சென்னைக்கு எப்போது வருகிறார்?
முகப்பு > செய்திகள் > தமிழகம்சொத்துக் குவிப்பு வழக்கில் நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்று வந்த சசிகலா இன்று விடுதலை செய்யப்பட்டார்.

தண்டனை காலம் முடிந்து சசிகலா விடுதலையான நிலையில், அதற்கான உத்தரவை சசிகலாவிடம் சிறைத்துறை அதிகாரிகள் வழங்கினார். முன்னதாக, கடந்த 21 ஆம் தேதியன்று கொரோனா தொற்று மூலம் பாதிக்கப்பட்ட சசிகலா, பெங்களுருவில் அமைந்துள்ள விக்டோரியா மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டிருந்தார்.
தற்போது அவருக்கு கொரோனா தொற்று முற்றிலும் நீங்கிய நிலையில், மருத்துவமனையில் இருந்தே சசிகலாவை விடுதலை செய்ய பரப்பன அஹரகார சிறை நிர்வாகம் முடிவு செய்துள்ளது. அங்கிருந்த போலீசாரின் காவல் தற்போது விலக்கிக் கொள்ளப்பட்டது. விடுதலையான சசிகலாவை தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல அவரது உறவினர்கள் முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், பிப்ரவரி 3 ஆம் தேதி தான் சசிகலா சென்னை வருவார் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றது.
தமிழக சட்டமன்ற தேர்தல் இந்தாண்டு நடைபெறவுள்ள நிலையில், சொத்துக் குவிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட சசிகலா தற்போது விடுதலையாகியுள்ளதால், இனிவரும் நாட்களில் தமிழக அரசியல் களத்தில் அனல் பறக்கும் என்பதில் எந்தவித சந்தேகமுமில்லை.

மற்ற செய்திகள்
