‘அதிகாலையிலேயே 1.5 கி.மீ நீளத்துக்கு நின்ற வரிசை!’.. ‘முதல் நாள் இரவே காரில் வந்து காத்திருந்த பலர்!’.. ‘அந்த சுவையான காரணம் இதுதான்!’
முகப்பு > செய்திகள் > இந்தியாபெங்களூருவின் ஹோஸ்கோட் நகரில் அதிகாலை 4.30 மணி முதல் பிரியாணி வாங்குவதற்காக மக்கள் சாலையில் 1.5 கி.மீ தொலைவுக்கு மக்கள் நீண்டவரிசையில் காத்திருந்தனர்.
பெங்களூருவிலிருந்து 25 கி.மீ. தொலைவில் இருக்கும் ஹோஸ்கேட் நகரில் உள்ள ஆனந்த் கடை தம் பிரியாணி அப்பகுதி ட்டாரத்தில் மிகவும் சுவையானது என்பதாலும், 22 ஆண்டுகள் பழமையான கடை என்பதாலுன்ம், மக்கள் கூட்டம் ஆயிரக்கணக்கான கிலோ தயார் செய்யப்பட்ட அளவில் பிரியாணியை வாங்க அலைமோதியது.
ஆனால் அதிகாலையில் பிரியாணி விற்பனை தொடங்கிய சில மணி நேரங்களிலேயே ஆயிரக்கணக்கான கிலோ மட்டன் பிரியாணி விற்றுத் தீர்ந்துமுள்ளது. இன்று வார விடுமுறை நாள் என்பதால், முதல் நாள் இரவே காரில் இப்பகுதிக்கு வந்து காரை நிறுத்திவிட்டு அதிகாலை வரை காத்திருந்து, வரிசையில் நின்று பிரியாணி வாங்கி சாப்பிட்டுச் சென்றனர்.
#WATCH Karnataka: People queue up at an eatery in Hoskote to buy biryani.
A customer says, "I came here at 4 am, but got my order at 6:30 am, as there's a long queue of about 1.5 km for biryani. The food is too delicious, it's worth the wait." pic.twitter.com/ThiT3zmEM6
— ANI (@ANI) October 11, 2020
இதுகுறித்து பேசிய உரிமையாளர்கள், “எங்கள் கடையில் சுவைக்காக செயற்கை பொருட்கள், ரசாயனப் பொருட்கள் சேர்க்காமல் பிரியாணி செய்கிறோம் என்பதால் மக்கள் விரும்புகிறார்கள். கொரோனாவுக்கு பிறகு பிரியாணியின் விற்பனை 20 சதவீதம் அதிகரித்துள்ளது” என்று கூறினர். அதிகாலை 4 மணிக்கு நிற்கத் தொடங்கிய மக்கள், 1.5 கி.மீ. தொலைவு வரையிலான நீண்ட வரிசையில் காத்திருந்து நீண்ட நேரம் பிரியாணிக்காக காத்திருந்தனர்.