சார், 'சாய் பாபா பிரசாதம்'ங்கிற பேருல... 'போலீஸ்' நிலையத்திற்கு வந்த 'தகவல்'... சென்று விசாரித்த போலீசாருக்கு காத்திருந்த 'அதிர்ச்சி'!!!
முகப்பு > செய்திகள் > இந்தியாகர்நாடக மாநிலம் பெங்களூர் பகுதியை அடுத்த கிரிநகர் என்னும் பகுதியில் 25 வயதான இளைஞர் ஒருவரை போதைப் பொருள் விநியோகம் செய்ததற்காக போலீசார் கைது செய்தனர்.

விக்ரம் கிலேரி (Vikram Khileri) என்ற அந்த இளைஞர், ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவராவர். அவர் பெங்களூர் பகுதியில் கடந்த ஒரு வருடமாக கட்டுமான தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார். கர்நாடகா மற்றும் தமிழகத்தின் சில பகுதிகளில் ஹெராயின் எனப்படும் போதைப் பொருளை விற்பனை செய்து வந்துள்ளார்.
முன்னதாக, இளைஞர் ஒருவர் போதை பொருள் விற்பனை செய்து வருவது தொடர்பாக பெங்களூர் போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. உடனடியாக போலீசார், அவரிடம் போதைப் பொருள் வாங்குவதை போல நாடகமாடி, விக்ரமை ஒரு பகுதிக்கு வர வைத்து அவரைக் கைது செய்தனர். அவரிடம் இருந்து 90 கிராம் போதைப் பொருளும், இரண்டு மொபைல் போன்கள் மற்றும் 6,000 ரூபாயையும் பறிமுதல் செய்யப்பட்டது.
சிறிய ஜிப்லாக் (ziplock) பேக்கில் போதைப் பொருளை நிரப்பி, ஒரு அட்டைப் பெட்டி மீது 'சாய் பாபா பிரசாதம்' என எழுதப்பட்டிருந்தது. பிரசாதம் என்ற போர்வையில் அந்த இளைஞர் போதைப் பொருள் விற்பனை செய்துள்ளார். கர்நாடக அரசு பேருந்து ஓட்டுனர்களிடமும் சாய் பாபா பிரசாதம் என்ற போர்வையில், பேருந்தில் ஏற்றி மாநிலத்தின் பல பகுதிகளில் அந்த இளைஞர் அதனை விற்பனை செய்துள்ளார். பிரசாதம் என்பதால் ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்கள் அதனை பெரிதாக கண்டுகொள்ளவில்லை என போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
கடந்த ஓராண்டாக, விக்ரம் பெங்களூரில் கட்டிடப் பணி செய்து வரும் நிலையில், அங்குள்ள போதை பொருள் சப்ளை செய்யும் ஒருவரிடம் பழக்கமாகி, விக்ரமும் அந்த தொழிலில் ஈடுபட்டுள்ளார். விக்ரம் கைது செய்யப்பட்டதும் சப்ளை செய்த நபரைத் தொடர்பு கொண்ட போது, அவரது எண் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து போதைப் பொருள் சப்ளை செய்யும் நபரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

மற்ற செய்திகள்
