நைட் 10 மணிக்கு மேல ‘வெளியூர்’ கிளம்புறீங்களா..? அப்போ மறக்காம இதெல்லாம் ‘ஃபாலோ’ பண்ணுங்க..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Selvakumar | Jan 06, 2022 07:22 AM

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவும் வேகம் அதிகரித்துள்ளதால் பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன.

Tamil Nadu Corona lockdown rules for travelling after 10 PM

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால், முதல்வர் மு.க.ஸ்டாலின் சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் நேற்று ஆலோசனை மேற்கொண்டார். இதனை அடுத்து செய்தியாளர்களை சந்தித்த சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்துவதாக தெரிவித்தார். மேலும் வார நாட்களில் இரவு 10 மணி முதல் 5 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

Tamil Nadu Corona lockdown rules for travelling after 10 PM

இதுகுறித்து அரசு வெளியிட்ட அறிவிப்பில்,

1. மாநிலத்திற்குள் பொது மற்றும் தனியார் பேருந்து போக்குவரத்து சேவைகள் பயன்படுத்துவோர் முக கவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைப்பிடித்தல், கூட்ட நெரிசலை தவிர்த்தல் ஆகியவற்றை தவறாமல் பின்பற்ற வேண்டும்.

2. ஓட்டுனர் மற்றும் நடத்துனர் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தி இருப்பதை போக்குவரத்து நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும்.

3. முழு ஊரடங்கு நாளான ஞாயிற்றுக்கிழமை பொது போக்குவரத்து மற்றும் மெட்ரோ ரயில் ஆகியவை இயங்காது.

4. வார நாட்களில் இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை வெளியூர் செல்பவதற்காக விமானம், ரயில் நிலையங்கள் செல்வதற்கு சொந்த மட்டும் வாடகை வாகனங்களை பயன்படுத்திக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அவ்வாறு பயணிக்கும் பொழுது மறக்காமல் பயணசீட்டை உடன் வைத்திருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

5. வார நாட்களில் பொதுப் பேருந்துகள் மற்றும் புறநகர் ரயில்களில் உள்ள இருக்கைகளில் 50 சதவீத பயணிகள் அமர்ந்து செல்ல மட்டுமே அனுமதிக்கப்படும். அதேபோல் மெட்ரோ ரயிலில் 50 இருக்கைகள் மட்டுமே பயணிகள் அமர்ந்து செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

6. அத்தியாவசிய பணிகளான பால் விநியோகம், தினசரி பத்திரிக்கைகள், மருத்துவமனைகள், மருத்துவ பரிசோதனை கூடங்கள், மருந்தகங்கள், ஆம்புலன்ஸ் மற்றும் அமரர் ஊர்தி சேவைகள் போன்ற மருத்துவம் சார்ந்த பணிகள், ஏடிஎம் மையங்கள், சரக்கு வாகனங்கள் மற்றும் எரிபொருள் வாகனங்கள் இரவு நேரத்திலும் அனுமதிக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Tags : #CORONA #OMICRON #LOCKDOWN

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Tamil Nadu Corona lockdown rules for travelling after 10 PM | Tamil Nadu News.