இனி ரயில்வே ஸ்டேஷன்ல இத யூஸ் பண்ண தடை..! அரசின் அடுத்த அதிரடி..!
முகப்பு > செய்திகள் > இந்தியாBy Selvakumar | Sep 12, 2019 02:38 PM
நாட்டின் முக்கிய ரயில் நிலையங்களில் ப்ளாஸ்டிக் பொருள்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சுதந்திர தின உரையில் ப்ளாஸ்டிக் பொருள்களுக்கு தடை விதிப்பது குறித்து பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். இந்த நிலையில் நாடு முழுவதும் உள்ள முக்கிய ரயில் நிலையங்களில் ஒருமுறை பயன்படுத்தும் ப்ளாஸ்டிக் பொருள்களுக்கு தடை விதிக்கப்படலாம் என கூறப்படுகிறது. இது வரும் அக்டோபர் மாதம் 2 -ம் தேதி முதல் அமல்படுத்தப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
ரயில் நிலையங்களில் அதிகமாக டீ, காப்பி கப்புகள், சாப்பாட்டு பொட்டலங்கள், திண்பண்டங்கள் என அதிகமாக ப்ளாஸ்டிக் பொருள்கள் பயன்படுத்துவதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது படிப்படியாக அனைத்து ரயில் நிலையங்களுக்கும் விரிவுபடுத்தப்பட உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் ப்ளாஸ்டிக் பொருள்களை அரைத்து தூளாக்கி மறுசுழற்சி செய்யும் 4 இயந்திரங்கள் வாங்கப்பட்டுள்ளதாகவும், இந்த மாத இறுதிக்குள் 4 இயந்திரங்களும் பயன்பாட்டுக்கு வரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.