'வீட்டுக்கு போகாம மனு வாங்குறீங்களா'?...'ஸ்பாட்ல சஸ்பெண்ட்'...வைரலாகும் கலெக்டரின் அதிரடி ஆடியோ!

முகப்பு > செய்திகள் > தமிழ்

By Jeno | Feb 22, 2019 12:31 PM

பணி நேரத்தில் கிராமத்தில் இல்லாமல் உதவித் தொகை பெற வந்த விவசாயிகளை அலைக்கழித்து,வி.ஏ.ஓ.வை நெல்லை கலெக்டர் ஷில்பா பிரபாகர் எச்சாரிக்கும் ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

If VAO not in the duty i will suspend says collector Shilpa Prabhakar

மத்திய அரசு திட்டத்தின் கீழ் வரும் உதவி தொகையினை பெறுவதற்காக 2 வயதான விவசாயிகள் நெல்லை கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து மனு அளித்துள்ளனர்.அப்போது ஏன் வி.ஏ.ஓ விடம் செல்லவில்லை என கேட்ட போது,வி.ஏ.ஓ கிராமத்தில் இல்லை எனவும்,அவர்கள் எங்களை அலைக்கழித்ததாகவும் கலெக்டர் ஷில்பாவிடம் புகார் அளித்துள்ளனர்.

இதனால் கோபமடைந்த கலெக்டர் ஷில்பா பிரபாகர் அது சம்பத்தப்பட்ட அதிகாரியிடம் நேரடியாக தொலைபேசியில் பேசியுள்ளார்.அப்போது உங்கள் பணியில் திருப்தியில்லை எனவும்,நான் ஆய்வுக்கு வரும்போது சம்பந்தப்பட்ட விஏஓக்கள் பணியில் இல்லாவிட்டால் சஸ்பெண்ட் செய்வதாகவும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.இதுதொடர்பாக கலெக்டர் ஷில்பா பிரபாகர் பேசிய ஆடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.

சமீபத்தில் கலெக்டர் ஷில்பா பிரபாகர்,தன்னுடைய மகளை அங்கன்வாடியில் சேர்த்தது குறிப்பிடத்தக்கது.

Tags : #TIRUNELVELI #VAO #COLLECTOR #SHILPA PRABHAKAR IAS