குடும்பத்துடன் குற்றாலத்துக்கு டூர்.. திரும்பி வந்த தொழிலதிபருக்கு காத்திருந்த ‘ஷாக்’..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்குடும்பத்துடன் சுற்றுலா சென்ற தொழிலதிபர் வீட்டில் மர்ம நபர்கள் கொள்ளையடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Also Read | விபரீதம்.! பாத்ரூமில் வாட்டர் ஹீட்டரை ON செய்த இளைஞர்.. திடீரென நடந்த பரபரப்பு சம்பவம்.!
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள தோணுகால் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன். தொழிலதிபரான இவர், கடந்த திங்கட்கிழமை வீட்டை பூட்டி விட்டு தனது குடும்பத்துடன் குற்றாலத்துக்கு சுற்றுலா சென்றுள்ளார்.
இந்த நிலையில், பாலசுப்பிரமணியன் உறவினர் ஒருவர் பூட்டியிருந்த வீட்டை பார்ப்பதற்காக சென்றுள்ளார். அப்போது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். உடனே உள்ளே சென்று பார்த்தபோது, வீட்டில் இருந்த பொருட்கள் சிதறி கிடந்துள்ளது. இதனை அடுத்து உடனடியாக போலீசாருக்கும், பாலசுப்பிரமணியனுக்கும் தகவல் தெரிவித்துள்ளார்.
தகவலறிந்து வந்த போலீசார், சம்பவ இடத்தில் ஆய்வு செய்தனர். அதில் வீட்டில் இருந்த இரண்டு பீரோக்களை உடைத்து அதிலிருந்து சுமார் 50 சவரன் தங்க நகைகளை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.
இந்த கொள்ளை சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், கொள்ளையடித்து விட்டு தப்பிச் சென்ற கொள்ளையர்களை தீவிரமாக தேடி வருகின்றனர். குடும்பத்தினர் சுற்றுலா சென்ற சமயத்தில் வீட்டில் கொள்ளை போயுள்ள சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Also Read | யாருப்பா இந்த பையன்..? அறிமுக போட்டியிலேயே ‘இரட்டை சதம்’.. திரும்பிப் பார்க்க வைத்த இளம் வீரர்..!

மற்ற செய்திகள்
