எப்பவும் இளமையா இருக்கணும்.. மர்ம பூஜைக்கு அப்புறம் தம்பதி செஞ்ச வேலை.. அடுத்தடுத்து வெளியான அதிர்ச்சி தகவல்..!
முகப்பு > செய்திகள் > இந்தியாகேரளாவில் இரண்டு பெண்கள் கொலை செய்யப்பட்ட வழக்கில் அடுத்தடுத்து அதிர்ச்சி தரும் செய்திகள் வெளியாகி வருகின்றன.
இரண்டு பெண்கள்
கேரள மாநிலம் எர்ணாகுளம் பகுதியில் வசித்து வந்த ரோஸ்லின் அங்கே லாட்டரி விற்பனை செய்து வந்துள்ளார். அவர் வசித்துவந்த இடத்திற்கு அருகே தமிழகத்தை சேர்ந்த பத்மா எனும் பெண்ணும் லாட்டரி விற்பனை செய்துவந்ததாக தெரிகிறது. சில மாதங்களுக்கு முன்னர் ரோஸ்லின் மற்றும் பத்மா ஆகிய இருவருமே காணாமல்போன நிலையில், இருவீட்டாரும் காவல்துறையில் புகார் அளித்திருக்கின்றனர். இதுகுறித்த விசாரணையில் இறங்கிய காவல்துறையினருக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது.
கைது
முதலில் இரு பெண்களுக்கும் போன் செய்திருந்த முகமது ஷபி என்பவரை காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அதில், திருவல்லா பகுதியை சேர்ந்த ஆயுர்வேத மருத்துவர் பகவல்சிங் மற்றும் அவரது மனைவி லைலா ஆகியோர் பண சிக்கல் தீர சிறப்பு பூஜை செய்ததும் அதில் இரு பெண்களையும் பலி கொடுத்ததும் காவல்துறைக்கு தெரியவந்தது. இதனையடுத்து முகமது ஷபி, பகவல்சிங் மற்றும் அவரது மனைவி லைலா ஆகியோரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் கேரளா முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், கைப்பற்றப்பட்ட இரண்டு பெண்களின் உடல்களிலும் சில பகுதிகளில் காயங்கள் இருப்பது தெரியவந்திருக்கிறது. இதனிடையே குற்றம்சாட்டப்பட்டவர்கள் பெண்களின் உடல் உறுப்புகளை சாப்பிட்டிருக்கலாம் என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், இந்த வழக்கில் கைதான லைலா, நரமாமிசத்தை சாப்பிட்டதாக காவத்துறையினரிடம் ஒப்புக்கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும், இளமையாக இருக்க வேண்டும் என்பதற்காக முகமது ஷபி, பெண்களின் உறுப்புகளை தம்பதியை சாப்பிட சொல்லியதாகவும் தகவல்கள் வெளியாகி இருப்பது நாட்டையே உலுக்கியுள்ளது.
பணம் தருவதாக கூறி, ரோஸ்லின் மற்றும் பத்மா ஆகிய இருவரையும் தம்பதியிடம் அழைத்துச் சென்றதும் காவல்துறையில் விசாரணையில் தெரியவந்திருக்கிறது. இந்நிலையில், கைது செய்யப்பட்ட மூவரையும் அக்டோபர் 26 ஆம் தேதிவரையில் நீதிமன்ற காவலில் வைக்க எர்ணாகுளம் நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.