பல தடவை கண்டிச்சும் கேட்கல.. வேறொரு வாலிபருடன் பேசிய முன்னாள் காதலி.. ஆத்திரத்தில் நண்பர்களுடன் சேர்ந்து காதலன் செய்த காரியம்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்முன்னாள் காதலியுடன் பழகிய இளைஞருக்கு காதலனால் நேர்ந்த சோகம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வீட்டுல கரெண்ட் கட்.. தூக்கக்கலக்கத்தில் பல் துலக்கிய இளம்பெண்.. கடைசியில் தெரியவந்த ஷாக் தகவல்..!
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையைச் சேர்ந்தவர் பாலு. இவர் அப்பகுதியில் ஒரு பெண்ணை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த சூழலில் காதலர்கள் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் பிரிந்துள்ளனர். இதனை அடுத்து பாலு காதலித்து வந்த பெண்ணுடன் விராலிமலைச் சேர்ந்த முகமது யாகூப் மகன் ரசூல் என்ற வாலிபர் பேசி பழகி வந்துள்ளார்.
இதை அறிந்த பாலு அவரைக் கண்டித்து வந்துள்ளார். ஆனாலும் அதை கண்டுகொள்ளாத ரசூல் தொடர்ந்து அப்பெண்ணுடன் பேசி வந்ததாக கூறப்படுகிறது. இந்த சூழலில் நேற்று சிவராத்திரி விழா விராலிமலை அருகே உள்ள விராலூர் பூமீஸ்வரர் கோயிலில் சிறப்பாக கொண்டாடப்பட்டது. அங்கு சென்ற பாலுவின் முன்னாள் காதலியுடன் ரசூல் பேசிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.
இதைப் பார்த்த பாலு மற்றும் அவரது நண்பர்கள் ரசூலுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது பாலு தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து ரசூலை தாக்கியதாக சொல்லப்படுகிறது. இதில் ரசூல் படுகாயமடைந்து சரிந்துள்ளார். இதனை அடுத்து அருகில் இருந்தவர்கள் ரசூலை மீட்டு மணப்பாறையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த விராலிமலை போலீசார் விசாரணை நடத்தியதில், காதல் விவகாரத்தால் இந்த சம்பவம் நடந்தது என்று தெரியவந்தது. இதனை அடுத்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தப்பியோடிய பாலு, அவரது தம்பி அருண், நண்பர் சக்தி ஆகியோரை தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மற்ற செய்திகள்
