'நல்ல வேல... வழியில யாரும் குறுக்க வரல... ஒரே போடா போட்ருப்பாரு'!.. CHAIR-ஐ தூக்கி அடித்து... உச்சகட்ட ஆவேசத்தில் கோலி!.. என்ன நடந்தது?
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஅவுட் ஆன கடுப்பில் ஆர்சிபி கேப்டன் கோலி ஆவேசமாக நடந்து கொண்ட வீடியோ வைரலாகி வருகிறது.

14வது ஐபிஎல் தொடரின் 6-வது போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டேவிட் வார்னர் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும், விராட்கோலி தலைமையிலான பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் மோதின.
இந்த போட்டியில் முதலில் டாசில் வெற்றி பெற்ற சன்ரைசர்ஸ் அணியின் கேப்டன் டேவிட் வார்னர் பந்துவீச முடிவு செய்தார். அதன்படி பெங்களூரு அணியில் துவக்க வீரர்களாக விராட் கோலி மற்றும் படிக்கல் ஆகியோர் களமிறங்கினர்.
கொரோனா பாதிப்பிற்கு பிறகு மீண்டு வந்த படிக்கல் இன்று விராட் கோலியுடன் களமிறங்கினார். 13 பந்துகளை சந்தித்த நிலையில் படிக்கல் 11 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேற ஒருபக்கம் விராட் கோலி மெதுவாகவே விளையாடி வந்தார். ஆனால், ஓவர்கள் சென்று கொண்டே இருக்க கோலி ஸ்ட்ரைக் ரேட் அதிகமாக வைத்து விளையாடவில்லை.
ஒருகட்டத்தில் அணியின் ரன் ரேட் குறைந்துகொண்டே சொல்ல அதனை அதிகரிக்க வேண்டும் என்று விராட் கோலி முயற்சித்தார். அந்த வேலையில் ரஷித் கான் மற்றும் சபாஷ் நதீம் ஆகியோர் எதிரணியின் பேட்ஸ்மேன்களை கட்டுப்படுத்தினர். இதனால் ரன் ரேட்டை அதிகரிக்கும் நோக்கில் 13 ஆவது ஓவரில் ஜேசன் ஹோல்டர் வீசிய பந்தை சிக்சருக்கு அடிக்க முயற்சித்த கோலி டாப் எட்ஜ் ஆகி லெக் சைடில் இருந்த விஜய்சங்கர் கையில் கேட்ச் ஆகி ஆட்டமிழந்து வெளியேறினார்.
முக்கியமான கட்டத்தில் அணிக்கு ரன்கள் தேவை என்ற நிலையில், ஆட்டம் இழந்து வெளியேறியதை விராட்கோலியால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. அதனால் தனது பொறுமையை இழந்த விராட் கோலி, ஆட்டமிழந்து வெளியே செல்கையில் பவுண்டரி லைனைக் கடந்து வீரர்கள் அமரும் சேரை தனது பேட்டால் அடித்து விட்டு உள்ளே சென்றார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
Kohli frustrated with himself 😅😅#RCBvsSRH #ViratKohli #IPL #IPL2021 pic.twitter.com/QS1tiKIQLo
— Abhilash Kumar (@AbhilashK95) April 14, 2021
Exasperated Virat Kohli caught on camera hitting a chair with his bat while walking off to pavilion after getting out tonight.#IPL2021 #IPL #ViratKohli #ABdeVilliers pic.twitter.com/6bkYCGWMad
— Shubham J. Ghatul Patil (@ghatuls) April 14, 2021
அந்த வீடியோவில் அவர் விக்கெட் விழுந்ததில் எவ்வளவு அழுத்தத்தி; இருந்திருப்பார் என்பது பிரதிபலிக்கிறது.

மற்ற செய்திகள்
