'எங்க கூட மேட்ச் நடக்குறப்போ...' ஒட்டுமொத்த இந்தியாவே 'டிவி' முன்னால உட்கார்ந்துருக்கும்...! 'ஸோ, உங்களுக்கு தான் பிரச்சனை...' 'எங்களுக்கெல்லாம் இது ஒரு மேட்டரே இல்ல...' பாகிஸ்தான் முன்னாள் வீரர்...!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுகடந்த சில வாரங்களுக்கு முன்பு இங்கிலாந்து அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள், 5 டி20 ஆட்டங்களை விளையாட பாகிஸ்தான் வந்தது. பாகிஸ்தான் வந்த சில நாட்கள் பயிற்சி மேற்கொண்ட நியூசிலாந்து அணி, போட்டி தொடங்கும் தினத்தன்று பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக பாகிஸ்தான் சுற்றுப்பயணத்தை ரத்து செய்வதாக நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்தது.
இதனால் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் மட்டுமல்லாது பாகிஸ்தான் அரசும், கிரிக்கெட் ரசிகர்களும் கடும் கோபத்தில் இருந்தனர். அதை தொடர்ந்து பாகிஸ்தானில் இரு டி20 ஆட்டங்களில் விளையாடவிருந்த இங்கிலாந்து அணியும் பாகிஸ்தான் சுற்றுப்பயணத்தை ரத்து செய்தது. இதற்கு காரணம் இந்தியா தான் என சில செய்திகளும் பரவின.
இந்நிலையில் தற்போது டி20 உலகக் கோப்பைப் போட்டி நடைபெற்று வரும் நிலையில் இந்தியாவும் பாகிஸ்தானும் நாளை மோதவுள்ளது. இந்நேரத்தில் பாகிஸ்தானின் முன்னாள் வீரர் சோயிப் அக்தர் இந்தியா குறித்து பேட்டியளித்துள்ளார்.
அதில், 'எங்கள் நாட்டில் வந்து விளையாடமல் பாதியில் சென்றது நியூசிலாந்து தான். அவர்கள் மீதே எங்களுக்கு கோபம் உள்ளது. எனவே இந்தியாவை விட அவர்களைத் தான் தோற்கடிக்க விரும்புகிறோம்.
இந்தியாவுடன் எங்களுக்கு எவ்விதப் பிரச்னையும் இல்லை. இந்தியா மற்றும் பாகிஸ்தான் மோதும் நாளில் மைதானம் முழுக்க இந்திய ரசிகர்கள் இருப்பதால் எங்களை விட இந்தியாவுக்குத்தான் அதிக அழுத்தம் இருக்கும்.
இந்தியா முழுவதுமே அன்று தொலைக்காட்சி முன் இருக்கும். இதில் நாங்கள் தோல்வியடைந்தால் எங்களுக்கு பிரச்சனை இல்லை. ஆனால் இந்தியா தோற்றால் என்ன நடக்கும் என அனைவரும் தெரியும். இந்த தொடரில் இந்தியா நிலைமையை நன்குக் கையாண்டால் நல்லது.
பாகிஸ்தான் முதலில் பேட்டிங் செய்து 180 ரன்கள் எடுத்துவிட்டால் மிகப்பெரிய வீரர்களுக்கும் தடுமாற்றம் ஏற்படும். ஒருவேளை பாகிஸ்தான் வீரர்கள் ஆச்சர்யப்படுத்தினால் சொல்வதற்கு ஒன்றும் இல்லை' எனக் கூறியுள்ளார்.