VIDEO: 'இதுக்கு பேரு ஃபீல்டிங்கா?'.. ஷர்துல் தாகூரை களத்திலேயே... வருத்தெடுத்த கேப்டன் கோலி!.. வைரல் வீடியோ!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்தியா-இங்கிலாந்து இடையிலான 3வது டி20 போட்டியின் போது ஃபீல்டிங்கில் மந்தமாக இருந்த ஷார்துல் தாகூரிடம் விராட் கோலி பொறுமை இழந்து நடந்து கொண்ட விதம் வைரலாகி வருகிறது.

நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டி 20 போட்டியின் போது இந்திய கேப்டன் தனது இயல்பான குணத்தை மாற்றிக் கொள்ள வேண்டியிருந்தது.
11 வது ஓவரில், ஃபீல்டிங்கில் மந்தமாக இருந்த ஷர்துல் தாகூரிடம் கோலி தனது பொறுமையை இழந்துவிட்டார். ஷார்துல் தாகூரின் மந்தமான ஃபீல்டிங்கைத் தொடர்ந்து கடுப்பான விராட், காட்டத்தை வெளிப்படுத்தினார்.
களத்தில் உயர் தரத்தை நிர்ணயிக்கும் கோலி, தாகூர் துரிதமாக பந்தை எடுத்திருந்தால், இங்கிலாந்து அடுத்த ரன்னை எடுக்காமல் தடுத்திருக்க முடியும் என்று நினைத்தார். அப்போது, ஜோஸ் பட்லர் அல்லது ஜானி பேர்ஸ்டோ என இருவரில் யாராவது ஒருவர் அவுட் ஆகியிருக்கலாம். அது ஆட்டத்தின் போக்கையே முற்றிலுமாக மாற்றியிருக்கும்.
அந்த அரிய வாய்ப்பை இந்திய அணி தவறவிட்டதை அடுத்து, ஜோஸ் பட்லர் மற்றும் ஜானி பேர்ஸ்டோ நிலைத்து நின்று ஆடி, இங்கிலாந்து அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்து சென்றனர்.
Kohli calling Shardul Thakur ‘ BEN STOKES’ 🙆🏼♂️😧 pic.twitter.com/cJm0fABTW6
— ribas (@ribas30704098) March 17, 2021

மற்ற செய்திகள்
