அன்னப்பூரணி VS ஆங்கர்.. என்ன சாதாரணமா நெனச்சிட்டு இருக்கீங்க இல்ல...? நேர்காணலில் மூச்சு வாங்கியபடி ஆவேசம்
முகப்பு > செய்திகள் > தமிழகம்சமூக வலைதளங்களில் இரண்டு நாட்களாக அன்னபூரணி அரசு அம்மா என்பவர் சாமியார் வேடம் அணிந்து மக்களுக்கு ஆசி வழங்குவது உள்ளிட்ட வீடியோக்கள் வைரலாகி பரவியது.
![annapoorani-arasu-amma shouted angrily at the interview annapoorani-arasu-amma shouted angrily at the interview](http://tamil.behindwoods.com/news-shots-tamil-news/images/tamilnadu/annapoorani-arasu-amma-shouted-angrily-at-the-interview-1.jpg)
மேலும், இவர் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியில் கலந்து கொண்ட வீடியோவும் இணைத்து சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இந்த சம்பவம் சர்ச்சை ஆனதைத் தொடர்ந்து, இதுகுறித்து Behindwoods-உடன் நடத்தப்பட்ட நேர்காணலில் பேசியுள்ளார்.
புரளி
அதில், இங்கே நிறைய பேர் புரளிகளை கிளப்பிக் கொண்டு இருக்கிறார்கள் நான் எங்கும் ஓடி ஒளியவில்லை நான் இங்கு தான் இருப்பேன். ஆன்மிகம் என்பது சொன்னால் புரியக் கூடிய விஷயம் இல்லை என்று தெரிவித்தார்.
திருமணம்
2009-இல் தன்னுடைய கணவர் அரசுடன் திருமணம் நடைபெற்றது என்றும் 2013ஆம் ஆண்டு சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சிக்கு வந்ததாகவும் தெரிவித்தார். மேலும் தான் சொல்ல வருவதை சாதாரண மக்களுக்கு புரிந்து கொள்ளும் ஆற்றல் இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.
கோபம்
நெறியாளர் அவரது ஆன்மீக வாழ்விற்கு முந்தைய தனிப்பட்ட வாழ்க்கை குறித்த கேள்விக்கு அதை சொல்லாமல் மூடி மறைத்து பதிலளித்துக் கொண்டிருந்தார் ஒருகட்டத்தில் கோபமடைந்து என்னை சாதாரணமாக நிறுத்திவிட்டீர்கள் இல்லை என்னை கட்டி உங்களுக்கு புரியல என்று கோபமாக கத்த தொடங்கி மூச்சு வாங்கிக்கொண்டே பேசத் தொடங்கினார்.
வந்து பாருங்கள்
இந்த விஷயத்தை நம்ப வைக்க முடியாது என்றும் அங்கு வந்து பார்த்தால் உணர்ந்து கொள்வார்கள் என்றும் என்னை நம்பி நூறு குழந்தைகள் வந்துள்ளார்கள் அவர்கள் உணர்ந்து உள்ளார்கள் என்றும் கூறினார். அங்கு வந்து கதறி அழும் மக்கள் பயிற்சியில் இல்லாத மக்கள் தான் என்றும் தெரிவித்துள்ளார். சக்தியை உணர வைப்பதற்காக நிரூபிப்பதற்காக நான் இங்கு வரவில்லை என்றும், இந்த சக்தி பிரபஞ்சத்துக்கு சொந்தம் என்றும் அதனை பேசி புரிய வைக்க முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.
![](https://www.behindwoods.com/images/spacer.gif)
மற்ற செய்திகள்
![](https://www.behindwoods.com/images/spacer.gif)