“எவ்வளவு நெருக்கடி வந்ததுனு உங்களுக்கே தெரியும்”.. ET பட விழாவில் ‘ஜெய் பீம்’ குறித்து சூர்யா பேச்சு..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்எதற்கும் துணிந்தவன் ட்ரைலர் வெளியிட்டு விழாவில் ‘ஜெய் பீம்’ திரைப்பட சர்ச்சை குறித்து நடிகர் சூர்யா பேசியுள்ளார்.
![Suriya on Jai Bhim issue at Etharkkum Thunindhavan trailer launch Suriya on Jai Bhim issue at Etharkkum Thunindhavan trailer launch](http://tamil.behindwoods.com/news-shots-tamil-news/images/tamilnadu/suriya-on-jai-bhim-issue-at-etharkkum-thunindhavan-trailer-launch.jpg)
எதற்கும் துணிந்தவன்
சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில், இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா ‘எதற்கும் துணிந்தவன்’ என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் பிரியங்கா அருள் மோகன் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் சூரி, வினய் ராய், சத்யராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
ட்ரைலர் வெளியிட்டு விழா
இந்த படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் மார்ச் 10-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த நிலையில் இப்படத்தின் ட்ரைலர் வெளியிட்டு விழா இன்று (02.03.2022) சென்னையில் நடைபெற்றது. இதில் சூர்யா, இயக்குநர் பாண்டிராஜ், பிரியங்கா அருள் மோகன், சத்யராஜ் உள்ளிட்ட படக்குழுவினர் அனைவரும் கலந்துகொண்டனர்.
சூர்யா
அப்போது பேசிய சூர்யா ஜெய் பீம் பட பிரச்சனை குறித்து பேசியுள்ளார். அதில், ‘கிட்டத்தட்ட இரண்டரை வருடம் கழித்து உங்களை சந்திக்கிறேன். எதற்கும் துணிந்தவன் படம் நல்லா வந்துருக்கு. என்னுடைய எந்த வெளிப்பாடா இருந்தாலும், கோவமா இருந்தாலும், வருத்தமா இருந்தாலும் அது எல்லாம் உங்களுக்காகத்தான். உங்களாலதான் நான். அதனால உங்களுக்கு ஏதோ ஒன்னு நடக்குதுன்னு தோணும் போது அதை வேடிக்கை பார்த்திக்கிட்டு இருக்க முடியாது. எப்போ பேசணுமோ அதை சரியா பேசணும். அப்போ ஒரு விஷயம் பேசுவேன்.
ஜெய் பீம்
ஜெய் பீம் திரைப்படத்தில் ஒரு சிலருக்கு சின்னச் சின்ன சங்கடங்கள் வந்தது. அது தற்காலிக பிரச்சனைதான். ஒருத்தர் ஒருத்தரும் மனசை புரிஞ்சிக்கிட்டோம்னு நினைக்கிறேன். அதை சரிசெய்ய அனைத்து முயற்சிகளையும் நாங்கள் எடுத்துள்ளோம். அந்த பிரச்சனையில் சில ரசிகர் மன்றங்களில் என்னுடைய தம்பிகளுக்கு (ரசிகர்கள்) பிரச்சனைகள் ஏற்பட்டன. எவ்வளவு எவ்வளவு நெருக்கடி வந்ததுனு உங்களுக்கு தெரியும். அதை இந்த வயதிலும் பக்குவத்துடன் கையாண்டீர்கள். அதனாலதான் சொல்றேன் நீங்கள்தான் எதற்கும் துணிந்தவர்கள். உங்கள் அனைவருக்கும் நன்றி. இழப்பதற்கு நாம் தயாராக இருந்தால், அடைவதற்கு நிறைய இருக்கு. அந்த மாற்றத்திற்கு தயாராக இருங்கள்’ என சூர்யா பேசியுள்ளார்.
வீட்டுல கரெண்ட் கட்.. தூக்கக்கலக்கத்தில் பல் துலக்கிய இளம்பெண்.. கடைசியில் தெரியவந்த ஷாக் தகவல்..!
![](https://www.behindwoods.com/images/spacer.gif)
மற்ற செய்திகள்
![](https://www.behindwoods.com/images/spacer.gif)