'இத பார்க்க கலைஞர் இல்லையே'... 'கலங்கி உணர்ச்சிவசப்பட்ட முதல்வர் ஸ்டாலின்'... தேற்றிய சொந்தங்கள்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்இந்த காட்சியைப் பார்க்கத் தலைவர் கலைஞர் இல்லையே என ஸ்டாலின் கண் கலங்கினார்.

தமிழக முதல்வராக மு.க ஸ்டாலின் இன்று காலை ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற விழாவில் பதவி ஏற்றுக்கொண்டார். அவரை தொடர்ந்து 34 அமைச்சர்கள் பதவி ஏற்றுக்கொண்டனர். பதவியேற்பு விழாவையடுத்து, முதல்வர் மு.க.ஸ்டாலின், புதிய அமைச்சர்களுக்கு ராஜ்பவனில் தேநீர் விருந்து அளித்தார்
ஆளுநர். மு.க.ஸ்டாலின், துரைமுருகனுடன் ஓ.பன்னீர்செல்வம், தனபால் ஆகியோர் அருகருகே அமர்ந்து தேநீர் அருந்தினர். பிறகு முதல்வர் ஸ்டாலின், ஆளுநர் மாளிகையிலிருந்து நேராக கோபாலபுரம் இல்லத்துக்குச் சென்றார். அங்கு முன்னாள் முதல்வர் கருணாநிதி படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்தார்.
அப்போது மு.க ஸ்டாலின் உணர்ச்சிவசப்பட்டுக் கண்கலங்கினார். தொடர்ந்து தயார் தயாளு அம்மாளிடம் ஆசி பெற்றார். இனி அவர் அங்கிருந்து கலைஞர் நினைவிடம் செல்வார் எனக் கூறப்படுகிறது.

மற்ற செய்திகள்
