‘கொரோனா 2-ம் அலையின் தாக்கம் ரொம்ப அதிகமாக இருக்கு’!.. முழு ஊரடங்கை 15 நாட்களுக்கு ‘நீட்டித்த’ மாநிலம்..!
முகப்பு > செய்திகள் > இந்தியாகொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக முழு ஊரடங்கை நீட்டித்து மகாராஷ்டிரா மாநிலம் அறிவித்துள்ளது.
இந்தியாவிலேயே மகாராஷ்டிரா மாநிலத்தில்தான் கொரோனா பரவல் சற்று அதிகமாக உள்ளது. அதனால் அம்மாநில அரசு கொரோனா பரவலை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அங்கு மக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
அம்மாநிலத்தில் நேற்று ஒரே நாளில் மட்டும் 46,781 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 816 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா தொற்றின் மொத்த பாதிப்பு 52.26 லட்சமாகவும், உயிரிழப்பு 78,007 ஆகவும் உள்ளது. இதனால் அம்மாநிலத்தில் மே 15-ம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் கொரோனா 2-ம் அலையில் தாக்கம் அதிகமாக இருப்பதால், நடைமுறையில் உள்ள முழு ஊரடங்கு கட்டுப்பாடுகளை மேலும் 15 நாட்களுக்கு நீட்டிக்க அம்மாநில அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. அதன்படி, ஜூன் 1-ம் தேதி காலை 7 மணி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது. மேலும் வெளிமாநிலங்களில் இருந்து மகாராஷ்டிராவுக்கு வரும் அனைவரும் ‘கொரோனா தொற்று இல்லை’ என்ற சான்றிதழ் அவசியம் காண்பிக்க என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.