"அடுத்த வருஷம் 'கோட்டை'யில கொண்டாடுவோம்'ன்னு சொல்லிருக்காரே??,.. 'கமல்ஹாசன்' கருத்திற்கு அமைச்சரின் பரபரப்பு 'பதில்'!!!
முகப்பு > செய்திகள் > தமிழகம்நடிகர் கமல்ஹாசன் சில ஆண்டுகளுக்கு முன் மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை ஆரம்பித்திருந்த நிலையில், கடந்த நாடாளுமன்ற தேர்தலிலும் போட்டியிட்டிருந்தார்.

இதனைத் தொடர்ந்து, அடுத்த ஆண்டு தமிழக சட்டமன்ற தேர்தலிலும் மக்கள் நீதி மய்யம் கட்சி போட்டியிடவுள்ளது. இந்நிலையில், நவம்பர் 7 ஆம் தேதியன்று கமல்ஹாசன் பிறந்தநாளை அவரது ரசிகர்கள் மற்றும் கட்சியை சேர்ந்தவர்கள் கொண்டாடினர்.
தனது பிறந்தநாளை நற்பணி தினமாக கொண்டாடியதற்காக மக்கள் நீதி மய்யத்தை சேர்ந்தவர்களுக்கு தனது ட்விட்டர் பக்கத்தில் கமல்ஹாசன் நன்றி தெரிவித்திருந்தார். அப்போது, அந்த பதிவில், 'அடுத்த பிறந்தநாளைக் கோட்டையில் கொண்டாடுவோம்' என குறிப்பிட்டிருந்தார்.
அதாவது, அடுத்த தேர்தலில் வெற்றி பெற்று ஜார்ஜ் கோட்டையில் கொண்டாடுவதைத் தான் கமல் அப்படி குறிப்பிட்டார் என பரபரப்பு கிளம்பியது. இதனிடையே, கமல்ஹாசனின் கருத்து குறித்து தமிழக அமைச்சர் ஜெயக்குமாரிடம் செய்தியாளர்கள் சந்திப்பில் கேள்வி கேட்கப்பட்டது.
அப்போது பேசிய ஜெயக்குமார், 'ஜார்ஜ் கோட்டையில் அடுத்த ஆண்டும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தான் கொடியேற்றுவார். கமல் உள்ளிட்ட மீதமுள்ளவர்கள் வேண்டுமானால் செஞ்சி கோட்டையில் போய் வேண்டுமானால் கொடியேற்றிக் கொள்ளட்டும்' என பதில் தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்
