"அடுத்த 'மேட்ச்'ல மட்டும் 'கோலி' இத பண்ணிட்டாரு... அப்றம் வேற லெவல் தான் போங்க..." 'மெகா' சாதனையை படைக்க காத்திருக்கும் 'கேப்டன்'!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான கடைசி டெஸ்ட் போட்டி, நாளை மறுநாள் அகமதாபாத் மைதானத்தில் வைத்து நடைபெறவுள்ளது.
![kohli need only one century to surpass ricky ponting record kohli need only one century to surpass ricky ponting record](http://tamil.behindwoods.com/news-shots-tamil-news/images/sports/kohli-need-only-one-century-to-surpass-ricky-ponting-record.jpg)
இதுவரை 3 டெஸ்ட் போட்டிகள் முடிந்துள்ள நிலையில், இந்திய அணி 2 - 1 என முன்னிலையில் உள்ளது. இறுதி போட்டியில், இந்திய அணி வெற்றி பெற்றாலோ அல்லது போட்டியை டிரா செய்தாலோ டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டிக்கு தகுதி பெறும். அப்படியில்லாமல், இங்கிலாந்து அணி வெற்றி பெறும் பட்சத்தில், ஆஸ்திரேலிய அணி இறுதி போட்டிக்குத் தகுதி பெறும்.
மேலும், இந்த கடைசி டெஸ்ட் போட்டியில் இந்திய கேப்டன் விராட் கோலி சதமடிக்கும் பட்சத்தில், மிக முக்கியமான சாதனை ஒன்றை படைப்பார். முன்னதாக, கடந்த 2019 ஆம் ஆண்டு வங்காளதேச அணிக்கு எதிராக சதமடித்திருந்த கோலி, அதன்பிறகு சர்வதேச போட்டிகளில் சதமடிக்கவே இல்லை. இந்த டெஸ்ட் தொடரிலும், இரண்டு போட்டிகளில் அரை சதம் மட்டுமே அடித்துள்ளார்.
அப்படி அவர் கடைசி போட்டியில் சதமடித்தால், கிரிக்கெட் உலக வரலாற்றில் அதிக சதமடித்த கேப்டன் என்ற பெருமையை கோலி பெறுவார். ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் மற்றும் கோலி ஆகியோர் இதுவரை கேப்டனாக 41 சதங்கள் அடித்து முதலிடத்தில் உள்ளனர். அப்படி கோலி சதமடிக்கும் நிலையில், ரிக்கி பாண்டிங்கின் சாதனையை அவர் முறியடித்து கிரிக்கெட் உலகில் யாரும் செய்யாத அதிரடி சாதனையை அவர் படைப்பார்.
தொடர்ந்து சில தொடர்களில், இந்த சாதனையை கோலியால் படைக்க முடியாமல் போனாலும், அடுத்த போட்டியிலாவது, இந்த சாதனையை அவர் நிச்சயம் முறியடிப்பார் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்து வருகின்றனர்.
இதே டெஸ்ட் தொடரில், இந்திய அணி இரண்டாவது வெற்றியை பதிவு செய்திருந்த போது, இந்திய மைதானங்களில் அதிக வெற்றி பெற்ற இந்திய கேப்டன்களில், தோனியின் சாதனையை கோலி முறியடித்து அசத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.
![](https://www.behindwoods.com/images/spacer.gif)
மற்ற செய்திகள்
![](https://www.behindwoods.com/images/spacer.gif)