ஃபேஸ்புக் ஓனர் மொபைல்ல இருந்த 'அந்த' ஆப்...! 'அது எப்படிங்க வெளிய லீக் ஆச்சு...? - கடைசியில அவருக்கே இந்த நிலைமையா...!
முகப்பு > செய்திகள் > வணிகம்உலக அளவில் பேஸ்புக் பயன்படுத்துபவா்களில் 53.3 கோடி பேரின் பெயா், மொபைல் எண் உள்ளிட்ட தகவல்கள் இணைய வழியில் கசிந்தன. இந்த தகவல்கள் அனைத்தையும் இணைய ஊடுருவல் கும்பல்கள் வெளியிட்டிருக்கின்றன.

இந்த நிலையில், உலகளவில் கசிந்த 53.3 கோடிப் பேரின் பெயர், மொபைல் எண் விவரங்களில் மார்க் ஸுக்கர்பெர்க்கின் மொபைல் எண்ணும், அதன் விவரங்களும் அடங்கும். அதில், மார்ச் ஸுக்கர்பெர்க்கின் பெயர், அவர் பயன்படுத்தும் மொபைல் எண், அவரது பிறந்த தேதி, வாழ்விடம் என்பது உள்ளிட்ட அனைத்து விவரங்களும் கசிந்துள்ளன.
மேலும், மார்க் ஸுக்கர்பெர்க் தனது செல்லிடப்பேசியில் சிக்னல் செயலியையும் பயன்படுத்துவது தற்போது தெரிய வந்துள்ளது. மேலும், தனது தனிப்பட்ட விவரங்களை பாதுகாப்பதில் மார்க் ஸுக்கர்பெர்க் அக்கறை கொண்டுள்ளார். அவரது தகவல் பரிமாற்றங்கள் அனைத்தும் என்க்ரிஃப்ஷன் செய்யப்பட்டுள்ளது. அதாவது, தகவல் அனுப்புபவரிடமிருந்து, பெறுபவருக்கு மட்டுமே தகவல்கள் கிடைக்கும், ஆனால் இந்த வசதி ஃபேஸ்புக்கில் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த தகவல்கள் அனைத்தையும், இணையவழியில் ஊடுருவி தகவல்களைத் திருடும் வலைதள கும்பல்கள் வெளியிட்டிருப்பதாக ஹட்சன் ராக் என்ற இணைய பாதுகாப்பு நிறுவனத்தைச் சோந்த ஆலன் கல் கூறியுள்ளார். இதுபற்றி அவர் வெளியிட்டுள்ள பதிவுகளில் அவா் கூறியிருப்பதாவது,
உலக அளவில் முகநூல் பக்கத்தை பயன்படுத்துபவா்களில் 53.3 கோடி பேரின் பெயா், செல்லிடப்பேசி எண் உள்ளிட்ட தனிப்பட்ட தகவல்கள் இணைய வழியில் கசியவிடப்பட்டிருக்கிறது. இந்த தகவல்கள் அனைத்தையும் இணைய ஊடுருவல் கும்பல்கள் வெளியிட்டிருக்கின்றன.
அமெரிக்காவிலிருந்து 3.23 கோடி பேரின் தகவல்களும், பிரிட்டனிலிருந்து 1.15 கோடி பேரின் தகவல்களும், ஆஸ்திரேலியாவிலிருந்து 73 லட்சம் பேரின் தகவல்களும், இந்தியாவிலிருந்து 61 லட்சம் பேரின் தகவல்களும் இதுபோன்று லீக் ஆகியுள்ளது.
இதுகுறித்து ஃபேஸ்புக் நிறுவன செய்தித்தொடா்பாளா் ஒருவா் கூறுகையில், 'இது கடந்த 2019-இல் வெளியான பழைய புள்ளிவிவரமாகும். இதை முகநூல் நிறுவனம் கடந்த 2019 ஆகஸ்ட் மாதமே கண்டறிந்து, தீா்வும் கண்டுவிட்டது' என்று தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்
