ஒரே ஒரு ஃபோட்டோ எடுத்தா போதும்!’... ஆள் யார்னு மொத்த ஜாதகமும் தெரிஞ்சுடும்.. ‘வேற லெவல்’ ஆப் ... உண்மையிலே இதுதான் காவல்துறையின் நண்பன்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சந்தேகப்படும் நபரை புகைப்படம் எடுத்தால், அவர், பழைய குற்றவாளியா அல்லது சாதாரண நபர் தானா என்பதை அறிய உதவும் FACETAGR எனும் மொபைல் செயலி பற்றி திண்டுக்கல் மாவட்ட எல்லை காவல்நிலைய ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவலர்கள் என 60 பேருக்கு, பயிற்சி வகுப்பு நடைபெற்றது. இதில், மாவட்ட காவல்

இரவு நேரங்களில் ரோந்துப் பணியில் ஈடுபடும் நேரம், சந்தேகத்திற்கு இடமான நபர் என நினைத்தால், FACETAGR செயலியின் மூலம் அந்த நபரை புகைப்படம் எடுத்தாலே போதும். அவர் மீது ஏற்கனவே வழக்குகள் உள்ளதா என கண்டறிய முடியும். பழைய குற்றவாளிகளாக இருந்தாலும் இந்த செயலி மூலம் அறிய முடியும்.
அதே நேரம், சந்தேகத்திற்கு ஆளான நபர், குற்றவாளி இல்லையெனி, அவரை உடனே விடுவிப்பதற்கான முடிவினையும் எடுக்கவும் உதவும் இந்த செயலி, 24 மணி நேரமும் காவல்துறையினருக்கு பெரிதும் உதவியாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சட்டம் ஒழுங்குப் பிரச்னைகள் உண்டாகும் இடங்களுக்கு செல்லும் காவல்துறையினர், அங்கு பிரச்னையில் ஈடுபடும் நபர் மீது முன்னமே குற்ற வழக்குகள் உள்ளனவா என அறிந்துகொள்ள FACETAGR செயலி பயன்படும் எனவும், சென்னை மாநகர காவல்துறையினர் மட்டுமே பயன்படுத்தும் இந்த செயலி, தற்போது தென் மாவட்டங்களில் திண்டுக்கல் மாவட்டத்தில் அறிமுகமாகியுள்ளதாகவும், மக்கள் யாரும் இச்செயலியை பயன்படுத்த இயலாது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மற்ற செய்திகள்
