"டூயோ ஆப்ல இனிமே இப்படிதான்!"... கூகுள் அறிமுகப்படுத்திய அசத்தலான வசதி!
முகப்பு > செய்திகள் > தொழில்நுட்பம்தேசப்பாதுகாப்பு மற்றும் தனிநபர் தரவுப் பாதுகாப்பு , தனிநபர் அந்தரங்க உரிமை உள்ளிட்ட காரணங்களால் சீனாவின் 59 ஆப்களை இந்திய அரசு இந்தியாவில் பயன்படுத்த அதிரடியாக தடை விதித்தது. இந்த நிலையில், டிக்டாக், ஹெலோ, வீ சாட் உள்ளிட்ட சீனாவின் முக்கிய ஆப்கள் இதில் தடை செய்யப்பட்டன.

இந்த சூழலில் உலக அளவிலான தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்களது மென்பொருள்களில் பலவிதமான அப்டேட்டுகளை கொண்டுவருகின்றன. இதேபோல் கலிபோர்னியாவை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் நிறுவனத்தின் ஜூம் என்கிற வீடியோ காலிங், வீடியோ மீட்டிங் ஆப் இந்த கொரோனா ஊரடங்கு காலத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது.
இந்நிலையில் கூகுள் டூயோ ஆப்பில் ஒரே நேரத்தில் நண்பர்கள், நண்பர்களின் நண்பர்கள், குடும்பத்தினர், குடும்ப நண்பர்கள் என 32 பேர் அதிகபட்சமாக வீடியோ சாட்டிங் மூலம் இணையும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. முன்னதாக இந்த கூகுள்
Calling friends of friends and extended families.
Now, bring up to 32 people together on a video call with Google Duo. pic.twitter.com/FUv48u6RjP
— Google India (@GoogleIndia) July 3, 2020
டுயோ செயலியில் 'ரீச்சபிள் வித் இமெயில் அட்ரெஸ்' என்கிற பெயரில் பயனர்கள் மின்னஞ்சல் முகவரி மூலம் வீடியோ அழைப்புகளை மேற்கொள்ள முடியும் வசதி உருவாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்
