நடிகை சாந்தினிக்கு அதிகரிக்கும் சிக்கல்!.. முன்னாள் அமைச்சர் பாலியல் வழக்கில் திடீர் திருப்பம்!.. போலீசாரிடம் குவியும் புகார்கள்!!
முகப்பு > செய்திகள் > தமிழகம்முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது பாலியல் புகார் அளித்த நடிகை சாந்தினியை கைது செய்யக் கோரி புகார்கள் குவிந்துவருகின்றன.
கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சராக இருந்த மணிகண்டன் மீது தகவல் தொழில் நுட்பத்தை தவறாக பயன்படுத்தி பிரபல நடிகையிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
அதைத் தொடர்ந்து, நடிகையின் புகாருக்கு பதிலடியாக மணிகண்டன் மனைவி வசந்தி, ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திக்கை சந்தித்து புகார் மனு ஒன்று அளித்துள்ளார். அதில், "சம்பந்தப்பட்ட நடிகை தனது கணவர் மீது பொய்யான பாலியல் புகார் அளித்துள்ளார். இதனால் தன் குடும்பத்தினர் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளோம். எனவே, துணை நடிகை மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என அந்த புகார் மனுவில் கூறியுள்ளார். அந்த புகார் மணிகண்டன் வழக்கை விசாரிக்கும் சென்னை காவல்துறையினருக்கு அனுப்பிவைக்கப்பட்டது.
இந்த நிலையில், மணிகண்டன் மீது புகார் அளித்த நடிகை மற்றும் தவறான தொடர்பில் ஈடுபடுவோருக்கு எதிராக ஆண்கள் பாதுகாப்பு சங்கம் களத்தில் இறங்கியுள்ளது.
அந்த சங்கத்தின் தலைவர் அருள்துமிலன், தமிழக முதல்வருக்கு அனுப்பி வைத்துள்ள புகார் மனுவில், மணிகண்டன் மீது நடிகை அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டதை வரவேற்பதாகவும், அதேசமயம் மணிகண்டன் ஏற்கனவே திருமணமானவர் என்று தெரிந்தும், அவருடன் நெருங்கிப்பழகி மூன்று முறை கருக்கலைப்பு செய்ததாக சம்பந்தப்பட்ட நடிகை கூறியுள்ளார். இவர் ஒரு குடும்பத்தை பிரிக்க திட்டமிட்டு கூட்டுச்சதி செய்தும், அதனை பயன்படுத்தி மிரட்டல் விடுத்ததும் தெரியவந்துள்ளதால், அந்த பிளாக்மெயில் நடிகை மீது வழக்கு பதிவு செய்து உடனடியாக கைது செய்யவேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இது போன்ற கள்ள தொடர்புகளால் தமிழகத்தில் ஏற்படும் விபரீத கொலைகளின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இது போன்ற தவறான தொடர்பில் ஈடுபடும் ஆண் பெண் இருபாலருக்கும் கடுமையான, சமமான தண்டனை கிடைக்கும் வகையில் அரசு புதிய சட்டம் இயற்ற வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
அதே போல நடிகை, பாடகி, கவிஞர் என தங்களை அடையாளப்படுத்திக் கொள்ளும் சில பெண்கள் அரசியல் பிரபலம் மற்றும் தொழில் அதிபர்களை தேடிச் சென்று, நட்பை எற்படுத்திக் கொண்டு மகிழ்ச்சியாக வாழும் அந்த குடும்பத்தினரை மிரட்டி பணம் பறிக்கும் செயல் தமிழகத்தில் தொடர்ந்து நடப்பதாக கூறியுள்ளார்.