VIDEO: 'அந்தரங்கமான' ஃபோட்டோஸ் எடுத்து வச்சு மிரட்டுறாரு...! 'முன்னாள் அமைச்சர் மீது...' - 'நாடோடிகள்' பட நடிகை பாலியல் குற்றச்சாட்டு...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ தன்னை ஆபாச புகைப்படம் எடுத்து மிரட்டுவதாக நாடோடி பட நடிகை போலீஸில் புகார் அளித்துள்ளார்.

அதிமுகவின் தகவல் தொழில்நுட்ப அமைச்சராக பதவி வகித்து வந்தவர் மணிகண்டன். கடந்த சில வருடங்கள் முன்பு முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் 18 பேர் ஆளுநரிடம் மனு அளித்தனர். அதன்மூலம் தகவல் தொழில்நுட்ப அமைச்சராக இருந்த மணிகண்டன் அமைச்சர் பதவி பறிக்கப்பட்டது
இந்நிலையில் தற்போது நாடோடிகள் படத்தில் அறிமுகமான நடிகை சாந்தினி, முன்னாள் அமைச்சர் மணிகண்டன் தன்னுடன் பல ஆண்டுகளாக குடும்பம் நடத்திவிட்டு திருமணம் செய்யாமல் ஏமாற்றுவதாக புகார் அளித்துள்ளார்
அந்த புகாரில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது, முதலில் அமைச்சர் என்னை பாலியல் வன்புணர்ச்சி செய்தார். அதன்பின் என்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி மீண்டும் நெருங்கி பழகினார்.
நாங்கள் பழகி 5 ஆண்டுகள் நிறைவடைந்தத நிலையிலும், திருமணம் செய்யாமல் ஏமாற்றி வருகிறார். அதோடு நாங்கள் தனியே இருந்தபோது அதனை புகைப்படம் எடுத்தும் வைத்திருந்துள்ளார்.
திருமணம் செய்துகொள்ளுமாறு கேட்டால், அந்தரங்க புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியிட போவதாகவும், கூலிப்படையை வைத்து கொலை செய்துவிடுவதாகவும் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மிரட்டுகிறார்.
அவரிடம் இருக்கும் எனது தொடர்பான அந்த வீடியோ மற்றும் புகைப்படங்களை அவர் அழிக்க வேண்டும். அத்தோடு அவர் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்' என நடிகை சாந்தினி கூறியுள்ளார்.
மலேசியாவை சேர்ந்தவர் நடிகை சாந்தினி 2ஜி ஸ்பெக்ட்ரம் படத்திலும் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்
