‘நாங்க சோஷியல் மீடியா கிடையாது’!.. அந்த ரூல்ஸ்ல இருந்து எங்களுக்கு ‘விலக்கு’ வேணும்.. நீதிமன்றத்தை நாடிய கூகுள்..!
முகப்பு > செய்திகள் > தொழில்நுட்பம்மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய விதிகளில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும்னெ கூகுள் நிறுவனம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
சமூகவலைதளங்கள் மட்டும் ஓடிடி தளங்களை கட்டுக்குள் கொண்டு வர மத்திய அரசு பல்வேறு விதிகளை விதித்தது. இந்த நிலையில், தாங்கள் தேடுபொறி நிறுவனம் என்பதால் புதியதாக அமல்படுத்தப்பட்டுள்ள விதிகளில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று கூகுள் நிறுவனம் கேட்டுக் கொண்டுள்ளது.
இதுகுறித்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் கூகுள் நிறுவனம் முறையிட்டுள்ளது. அதில், ‘நாங்கள் தேடுபொறி நிறுவனம்தான் சமூக வலைதளம் அல்ல. அதனால் புதிதாக அமல்படுத்தப்பட்டுள்ள விதிகளில் இருந்து எங்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும்’ என கூகுள் நிறுவனம் கூறியுள்ளது. இதனை அடுத்து இதுதொடர்பாக பதிலளிக்க மத்திய அரசிற்கு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முன்னதாக சமூக வலைதளங்கள், ஓடிடி தளங்கள் மற்றும் செய்தி இணையதளங்களை கட்டுப்படுத்த மத்திய அரசின் மின்னணு தகவல்நுட்ப அமைச்சகம், டிஜிட்டல் மீடியா ஒழுங்குமுறை விதிகளை கொண்டு வந்தது. இதற்கு பேஸ்புக், வாட்ஸ் அப் உள்ளிட்ட நிறுவனங்கள் உடன்பட்ட நிலையில், ட்விட்டர் நிறுவனம் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தது. மத்திய அரசு கொண்டுவந்த டிஜிட்டல் மீடியா ஒழுங்குமுறை விதிகள் தனி மனித உரிமை கொள்கையை பாதிக்கும் வகையில் இருப்பதாகவும், இதனால் கருத்து சுதந்திரமும் பாதிக்கப்படலாம் என கூறி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
தற்போது ட்விட்டர் நிறுவனம், மத்திய அரசு கொண்டு வந்த புதிய விதிகளுக்கு உடன்படுவதாக தெரிவித்துள்ளது. இந்த நிலையில் கூகுள் நிறுவனம் இந்த விதிகளில் இருந்து விலக்கு கேட்டு நீதிமன்றத்தை நாடியுள்ளது.