"என்ன இப்படி ஒரு 'பிளான்' பண்ணி 'இங்கிலாந்து' கிளம்பி போறீங்க??.." நினைக்கவே 'விசித்திரமா' இருக்கு.." 'கிழித்து தொங்க விட்ட 'முன்னாள்' வீரர்!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளிடையேயான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி, இந்த மாதம் 18 ஆம் தேதி முதல் 22 ஆம் தேதி வரை, இங்கிலாந்தின் சவுதாம்ப்டன் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இந்த போட்டியைத் தொடர்ந்து, ஆகஸ்ட் மாதம் 4 ஆம் தேதி முதல், இங்கிலாந்து அணிக்கு எதிராக 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரிலும் இந்திய அணி பங்கேற்கவுள்ளது. இந்த இரு தொடர்களுக்கு வேண்டி, இந்திய அணி, சுமார் 3 மாதங்களுக்கு மேல் வரை, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளது.
மேலும், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கு இடையே, ஒன்றரை மாத கால இடைவெளியை இங்கிலாந்திலேயே இந்தியா கழிக்கவுள்ளது. ஆனால், இங்கிலாந்து அணி இதற்கிடையில், இரண்டு தொடர்களில் பங்கேற்கவுள்ளது. இந்நிலையில், இந்திய அணியின் முன்னாள் வீரரான திலிப் வெங்சர்க்கார் (Dilip Vengsarkar), இது பற்றி கேள்வி எழுப்பியுள்ளார்.
'அந்த ஒன்றரை மாத கால இடைவெளியில் இந்திய அணியினர் அங்கு என்ன செய்யப் போகிறார்கள். இந்த தொடர்களின் திட்டமிடலால், நான் மிகவும் ஆச்சரியப்படுகிறேன். எந்த வகையில், இந்த சுற்றுப்பயணம் ஏற்பாடு செய்யப்படுகிறது?. முதலில் ஒரு டெஸ்ட் மேட்ச் ஆடிவிட்டு, அதன் பிறகு ஒன்றரை மாத காலம் சும்மா இருந்து விட்டு, பிறகு மீண்டும் ஒரு டெஸ்ட் தொடரில் எப்படி உங்களால் ஆட முடியும்?.
இலங்கை மற்றும் பாகிஸ்தான் ஆகிய அணிகள், குறைந்த ஓவர் போட்டிகளுக்காக ஜூலை மாதத்தில், இங்கிலாந்து செல்கின்றன. இந்த இரு அணிகளுக்கு எதிராகவும், ஒரு நாள் மற்றும் டி 20 போட்டிகளில் பங்கேற்க முடிந்த இங்கிலாந்து அணியால், டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் முடிந்தவுடனேயே ஏன் இந்திய அணிக்கான டெஸ்ட் தொடரை நடத்த முடியவில்லை?.
டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்கு பிறகு, இந்திய அணி, திரும்பி வந்து மீண்டும் திரும்பிச் செல்கிறதா?. அந்த ஒன்றரை மாதங்களில் இந்திய அணி என்ன செய்யப் போகிறது?. இதற்கிடையில், கவுண்டி போட்டிகளைத் திட்டமிட்டாலும் கூட, ஒன்றரை மாதங்கள் கவுண்டி போட்டிகளை நடத்துவது என்பது, மிகவும் நீண்ட காலமாகும்.
இந்த பயணம் வித்தியாசமாகவும், அதே வேளையில், ஒன்றரை மாத காலம் இந்திய அணி, போட்டிகள் இல்லாமல் இருப்பது என்பது, விசித்திரமாகவும் உள்ளது. இந்திய அணி அங்கு டெஸ்ட் போட்டிகள் ஆடச் சென்றிருந்தால், இடைவெளி எதுவுமின்றி, தொடர்ச்சியாக அதனை ஆடி முடித்திருக்க வேண்டும். ஏன் பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகள், ஒரு நாள் மற்றும் டி 20 போட்டிகளில், இதற்கிடையே வந்து ஆடுகிறது?. இது அபத்தமானது' என பல கேள்விகளை திலீப் வெங்சர்க்கார் அடுக்கித் தள்ளியுள்ளார்.