TN LOCAL BODY ELECTIONS: “உதய் அண்ணா தான் ரோல்மாடல்”.. வெற்றிபெற்று கெத்து காட்டும் 22, 23 வயது திமுக பெண் வேட்பாளர்கள்..
முகப்பு > செய்திகள் > தமிழகம்சென்னை, 22, பிப்ரவரி 2022: தமிழகத்தில் 1,374 மாநகராட்சி உறுப்பினர்கள், 3,843 நகராட்சி உறுப்பினர், 7,621 பேரூராட்சி உறுப்பினர் பதவிகள் என மொத்தமாக 12,838 பதவிகளுக்கு கடந்த 19 ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது.
தேர்தல் நிலவரம்
தமிழக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 61 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன.முறைகேடு புகார் காரணமாக சென்னை உள்பட 4 மாவட்டங்களில் 7 வாக்குச்சாவடிகளில் நேற்று மறு வாக்குப்பதிவு நடந்தது. இது தொடர்பான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. தமிழகம் முழுவதும் சுமார் 279 மையங்களில் ஓட்டு எண்ணிக்கை நடைபெற்று வந்த நிலையில் இதன் முடிவுகள் தொடர்ச்சியாக வெளியாகி வருகின்றன.
இளம் வேட்பாளர்கள்..
அதன்படி காலை வாக்கு எண்ணிக்கை துவங்கியதில் இருந்தே திமுக பெரும்பாலான இடங்களில் முன்னிலை பெற்று வந்தது. இதில் இம்முறை திமுகவில் வேட்பாளர்களாக இளம் பெண்களுக்கும் வாய்ப்புகள் வழங்கப்பட்டு வந்தன. அதன்படி வாக்கு எண்ணிக்கையில் கோடம்பாக்கம் 136வது வார்டில் திமுக சார்பில் போட்டியிட்ட 22 வயதே ஆன நிலவரசி துரைராஜ் (23) வெற்றி பெற்றுள்ளார்.
இதேபோல், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க சார்பில் போட்டியிட்ட கௌசிகி (22) வெற்றி பெற்றுள்ளார். இதை பார்த்த அரசியல் ஆர்வலர்கள் பலரும் இளைஞர்கள் அரசியலுக்கு வருவதே வரவேற்கப்படுவது எனும் போது இவ்வளவு சிறிய வயதில் தெள்ளறிவுடன் அரசியல் களத்துக்கு வருகை தரும் இந்த இளம் பெண்களை எந்த கட்சி, கொள்கைகள் பேதங்களின்றி பாராட்டி வருகின்றனர்.
உதயநிதி அண்ணா தான் ரோல்மாடல்
இதில், நிலவரசி துரைராஜ் தம்முடைய பக்கத்தில் தமது இந்த வெற்றி குறித்து பேசும்போது. “இந்நேரத்தில் எனக்கு வாய்ப்பளித்த தமிழகத்தின் முதல்வர் மு.க .ஸ்டாலின் அவர்களுக்கும், விருகம்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் பிரபாகர் ராஜா அவர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
குறிப்பாக திமுக இளைஞரணி தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான நடிகர் உதயநிதி ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துள்ள நிலவரசி துரைராஜ், “” என்று குறிப்பிட்டுள்ளார். இதனை திமுக இளைஞர்கள் பகிர்ந்தும் பாராட்டுக்களை தெரிவித்தும் வருகின்றனர்.