அதிவேகமாக ஒரே பைக்கில் சென்ற 3 சிறுவர்கள்... மரத்தில் மோதி பலியான துயரம்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்ஒரே பைக்கில் 3 சிறுவர்கள் இணைந்து அதிவேகமாக பைக் ஓட்டிய போது ஏற்பட்ட விபத்தால் சம்பவ இடத்திலேயே மூவரும் பலியாகி உள்ளனர்.
![3 young students died on the spot in a bike accident 3 young students died on the spot in a bike accident](http://tamil.behindwoods.com/news-shots-tamil-news/images/tamilnadu/photo-3-young-students-died-on-the-spot-in-a-bike-accident.jpg)
திருவனந்தபுரத்தில் உள்ள வழயிலா அருகே உள்ள அருவிக்கரா சாலையில் 16 வயதை உடைய மூன்று சிறுவர்கள் ஒரே இருசக்கர வாகனத்தில் மிகவும் வேகமாக சென்று கொண்டு இருந்துள்ளனர். அப்போது அதி வேகத்தின் காரணமாக ஒரு வளைவில் பைக் நிலைதடுமாறியது.
நிலை தடுமாறிய பைக் வந்த அதே வேகத்தில் சாலை ஓரத்தில் இருந்து மரப்புதற்குள் பாய்ந்தது. பைக்கில் மூவர் ஆக செல்வதே தவறு. இதில் மூவரில் யாருமே தலையில் ஹெல்மெட் அணியவில்லை. மரத்தில் மோதிய வேகத்தில் மூன்று பேருமே சம்பவ இடத்திலேயே பலியாகி உள்ளார்கள்.
சாலையில் சென்ற மற்ற வாகன ஓட்டிகள் இந்த விபத்தைக் கண்டு உடனடியாக அந்த சிறுவர்களை தூக்கி விடச் சென்றனர். ஆனால், பைக் அதிவேகமாக வந்ததால் அந்த வேகத்தில் மரத்தில் மோதியதில் அதிக ரத்தம் வெளியேறி மூவரும் பலியாகிவிட்டனர். சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார் சிறுவர்களின் உடல்களைக் கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
உயிரிழந்த சிறுவர்கள் பினீஷ், ஸ்டீஃபன், முல்லப்பன் ஆகிய மூவர் என போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. மூன்று பேரும் திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு பள்ளியில் 11ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் என்றும் தெரிய வந்துள்ளது.
இந்த பைக் விபத்தின் சிசிடிவி வீடியோ காட்சி தற்போது சமுக வலைதளங்களில் அதிகப்படியாக பகிரப்பட்டு வருகிறது.
![](https://www.behindwoods.com/images/spacer.gif)
மற்ற செய்திகள்
![](https://www.behindwoods.com/images/spacer.gif)