குட்டி உடன் போலீஸ் ஸ்டேஷன் வந்த யானை... உள்ளே அனுமதிக்க நீண்ட நேர போராட்டம்!- வைரல் காட்சிகள்
முகப்பு > செய்திகள் > இந்தியாயானை ஒன்று தனது குட்டி உடன் போலீஸ் ஸ்டேஷன் ஒன்றுக்குள் நுழைய முற்படும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி வைரல் ஆகி வருகின்றன.

கேரளாவில் யானைகள் அதிகம் என அனைவருக்கும் தெரியும். யானைகளை மாநில சொத்து போல் பரிமறித்துப் பெருமை கொள்ளும் கேரளாவில் நடந்த ஒரு சம்பவம் தற்போது சமுக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
இந்த வைரல் வீடியோ பதிவில் தாய் யானை ஒன்று தனது குட்டி உடன் போலீஸ் ஸ்டேஷன் ஒன்றுக்குள் நுழைய முற்படுகிறது. பரம்பிகுளம் போலீஸ் ஸ்டேஷன் உள்ளே நுழைய அந்த தாய் யானையும் குட்டி யானையும் நீண்ட நேரமாக போராடுகின்றன. இரும்பு கேட்டை மோதி உள்நுழைய அந்த யானைகள் கடுமையான முயற்சியில் ஈடுபடும் காட்சிகள் வெளியிடப்பட்டுள்ளன.
இந்த வீடியோவை கேரள போலீஸ் தனது ட்விட்டர் பக்கத்திலும் வெளியிட்டுள்ளது. இந்த வீடியோ பிரபல மலையாள சினிமாவின் வசனங்கள் உடன் இணைத்து கேரள போலீஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் கடந்த ஜனவரி 2-ம் தேதி பதிவு செய்துள்ளனர். இந்த வீடியோவை தற்போது சமுக வலைதளங்களில் மக்கள் அதிகம் பகிர்ந்து வருகின்றனர்.
கேரள போலீஸின் ட்விட்டர் பக்கத்தில் ட்விட்டர்வாசிகளுள் ஒரிவர், “பாவம்! அந்த யானைகள் புகார் கொடுக்க வந்திருக்கின்றன” என்றும் மற்றொருவர் “புகார் கொடுக்க வந்தவர்களை வெளியிலேயே நிறுத்தி வைத்திருக்கிறீர்கள்” என்றும் கமெண்ட் செய்து வருகின்றனர்.
கேரளாவில் யானைகளால் இது போன்ற சம்பவங்கள் அடிக்கடி நடைபெறுவது வழக்கமாகி உள்ளது. இதற்கு முன்னர் கூட யானை ஒன்று தனது பாகன் இறந்த போது அவரை விட்டு அகலாமல் அவரது இறுதி சடங்குக்கு வந்து மரியாதை செலுத்துவது போன்ற வீடியோவும் கேரளாவில் வைரல் ஆனது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்
