சமைக்க வாங்கிய மிக்ஸ்டு காய்கறிகள் பாக்கெட்: உள்ளிருந்து எட்டிப்பார்த்த அந்த 2 கண்கள்… அதிர்ந்த இளைஞர்

முகப்பு > செய்திகள் > உலகம்

By Rahini Aathma Vendi M | Jan 03, 2022 04:08 PM

சூப்பர் மார்கெட்டில் இருந்து வாங்கிய காய்கறிகள் பாக்கெட்டில் விநோதமாக இரண்டு கண்கள் தன்னைப் பார்த்ததாக ஒரு அதிர்ச்சிகர சம்பவத்தை எதிர்கொண்டுள்ளார் இளைஞர் ஒருவர்.

man found a head in the vegetables packet from supermarket

ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த ஜுவான் ஜோஸ் என்பவர் பதப்படுத்தப்பட்ட மிக்ஸ்டு காய்கறிகள் பாக்கெட் ஒன்றை சூப்பர் மார்கெட்டில் இருந்து வாங்கி உள்ளார். அந்த காய்கறி பாக்கெட்டில் உருளைக்கிளங்கு உட்பட சில காய்கறிகள் கலந்து இருந்துள்ளன. வெளிநாடுகளில் இதுபோல் பதப்படுத்தப்பட்ட நறுக்கிய காய்கறி பாக்கெட்டுகளை வாங்கி மக்கள் அப்படியே பாத்திரங்களில் போட்டு சமைப்பது வழக்கம்.

man found a head in the vegetables packet from supermarket

பாக்கெட் காய்கறிகளை கழுவவோ, வெட்டவோ தேவையில்லை. அந்த பாக்கெட்டில் ரெடிமேட் ஆக இருக்கும் பொருட்கள் அப்படியே பாத்திரத்தில் கொட்டி சமைத்துச் சாப்பிடுவார்கள். அப்படித்தான் இந்த ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த இளைஞரும் சூப்பர் மார்க்கெட்டில் இருந்து வாங்கிய உறைந்த பதப்படுத்தப்பட்ட ரெடிமேட் காய்கறிகள் நிறைந்த பாக்கெட்டை வாங்கிப் பயன்படுத்தி உள்ளார்.

man found a head in the vegetables packet from supermarket

முதலில் என்னென்ன அந்த பாக்கெட்டில் இருக்கிறது என்பதைப் பார்க்காமல் அப்படியே பாத்திரத்தில் போட்டு சமைத்துள்ளார். சமைத்ததை சாப்பிடும் போதுதான் உருளைக்கிழங்குக்கு மத்தியில் வேறு ஏதோ ஒரு பொருள் வித்தியாசமாக இருப்பதை அந்த இளைஞர் கவனித்துள்ளார். முதலில் அது ஆர்டிசோக் காய்கறி ஆக இருக்கும் என நினைத்துள்ளார். தமிழில் கூனைப்பூ எனக் கூறுவார்கள். ஒரு வித முட்டைக்கோஸ் ரக காய்கறி ஆகும்.

man found a head in the vegetables packet from supermarket

ஆனால், அதை எடுத்துச் சாப்பிட்ட பின்பு தான் வித்தியாசமாக உணர்ந்துள்ளார். அடுத்த ஸ்பூனை எடுக்கும் போது அந்த இரண்டு கண்களைப் பார்த்ததாக விவரிக்கிறார் அந்த இளைஞர். ஆமாம், அந்த இளைஞர் சாப்பிட்டது ஒரு மாமிசத்துண்டு. அதுவும் ஒரு எலியின் தலை அது. இதை பக்கத்து வீட்டுக்காரர்களிடம் எல்லாம் காட்டி அது எலி தான் என்பதை உறுதி செய்துள்ளார் அந்த இளைஞர்.

தற்போது ஜுவான் ஜோஸ் அந்த சூப்பர் மார்க்கெட் மீது வழக்குத் தொடர்ந்துள்ளார். ரெடிமேட் உணவுகளில் என்ன இருக்கிறது என்பதை பார்த்து கூட சமைக்க முடியாத அளவு அஜாக்கிரதையாக இருந்ததன் காரணமாக இப்படியொரு அதிர்ச்சியைச் சந்தித்துள்ளார் ஜோஸ்.

Tags : #ACCIDENT #VEGETABLES PACK #RAT IN VEGETABLES #RAT HEAD IN FOOD #காய்கறிகள் பாக்கெட் #காய்கறிக்குள் கண்கள் #எலி

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Man found a head in the vegetables packet from supermarket | World News.