'ஒரு பாக்கெட் தக்காளி கொடுங்க...' எப்படி நடந்திட்டு இருந்த வியாபாரம்...! - கவலையோடு வாங்கி செல்லும் மக்கள்...!
முகப்பு > செய்திகள் > இந்தியாதமிழகத்தில் இருந்து கேரளாவிற்கு ஒரு நாளைக்கு சராசரியாக 100 டன்னுக்கு மேல் காய்கறிகள் அனுப்பி வைக்கப்படுவதாக செய்தி வெளியாகியுள்ளது.

தமிழ்நாடு மட்டுமல்லாமல் கேரளாவில் பெய்த தொடர்மழை காரணமாக காய்கறிகள் விலை தங்கத்தின் விலையை காட்டிலும் வேகமாக அதிகரித்து வருகிறது.
பெரும்பாலான காய்கறிகள் முன்பை விட ஒரு மடங்கு அதிகரித்து உள்ளதால் நடுத்தர மக்கள் காய்கறிகளை வாங்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
மழைக்கு முன்னர் கடந்த மாதம் கிலோ ரூ.10 முதல் ரூ.30 வரை தக்காளி விற்கப்பட்டது. கனமழையினால் தரையில் விளைந்த தக்காளி முற்றிலும் அழுகி நாசமானது. இதன்காரணமாக சந்தைக்கு குறைந்த அளவு தக்காளிகளே வருகிறது.
அதனை வணிகர்கள் போட்டி போட்டு ஏலம் எடுத்து வாங்கிச் செல்வதால் விலை பல மடங்குகள் அதிகரித்தது. ஒட்டன்சத்திரம் சந்தையில் ஒரு கிலோ தக்காளி அதிகபட்சமாக ரூ.115 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
கடந்த மாதம் லேசாக உடைந்த தக்காளிகளை சாலையில் கொட்டிச் சென்ற நிலையில் தற்போது அந்த தக்காளிகளையும் வியாபாரிகள் வாங்கிச் செல்லும் நிலை உருவாகியுள்ளது.
ஒட்டன்சத்திரம் சந்தையில் இருந்து தினசரி சராசரியாக 100 டன்னிர்க்கும் மேல் காய்கறிகள் கேரளாவில் பல்வேறு மாவட்டங்களுக்கு அனுப்பப்படுகிறது. தக்காளி விலை உயர்வு காரணமாக 2 தக்காளிகளை பிளாஸ்டிக் கவருக்குள் அடைத்து அதனை ரூ.18 என்று விலை என்று விற்று வருகின்றனர்.
இதேப் போன்று பிளாஸ்டிக் கவர்களில் அடைக்கப்பட்ட தக்காளிகள் அதிக அளவு கேரளாவுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இன்னும் ஒருசில வாரங்கள் இதே நிலை நீடிக்கும் என்பதால் பொதுமக்கள் கலங்கி போயுள்ளனர்.

மற்ற செய்திகள்
