RCB அணிக்கு அடுத்த கேப்டன் இவரா..? லிஸ்ட்லயே இல்லாத பெயரா இருக்கே..! கசிந்த தகவல்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு புதிய கேப்டனாக நியமிக்கப்பட உள்ள வீரர் குறித்த தகவல் கசிந்துள்ளது.

ஐபிஎல் தொடரின் 14-வது சீசன் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றது. இதில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. இந்த சூழலில் நடப்பு ஆண்டு முதல் லக்னோ, அகமதாபாத் என்ற 2 புதிய அணிகள் இணைய உள்ளன. அதனால் அனைத்து அணையில் உள்ள வீரர்களும் கலைக்கப்பட்டு மெகா ஐபிஎல் ஏலம் நடைபெற உள்ளது.
இதனிடையே நடந்து முடிந்த ஐபிஎல் தொடருடன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து விராட் கோலி விலகுவதாக அறிவித்தார். அதனால் அந்த அணியில் விராட் கோலிக்கு அடுத்து மூத்த வீரராக அறியப்பட்ட தென் ஆப்பிரிக்க வீரர் ஏபி டிவில்லியர்ஸ் கேப்டனாக நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாக கருதப்பட்டது. ஆனால் திடீரென அனைத்து விதமான கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக ஏபி டிவிலியர்ஸ் அறிவித்தார். அதனால் பெங்களூரு அணிக்கு புதிய கேப்டனாக யார் வர உள்ளனர் என ரசிகர்கள் மத்தியில் கேள்வி எழுந்துள்ளது.
இந்த நிலையில் ஐபிஎல் ஏலத்தில் இளம் இந்திய வீரர் ஸ்ரேயாஸ் ஐயரை எடுக்க பெங்களூரு அணி தீவிரம் காட்டி வருவதாக கூறப்படுகிறது. அதற்கு காரணம் அவரை கேப்டனாக நியமிக்க பெங்களூரு அணி முயற்சி செய்து வருவதாக கூறப்படுகிறது.
கடந்த 2018-ம் ஆண்டு டெல்லி கேப்பிடல் அணியை கேப்டனாக ஸ்ரேயாஸ் ஐயர் வழி நடத்தினார். இதனைத் தொடர்ந்து 2019 மற்றும் 2020-ம் ஆண்டுகள் டெல்லி அணிக்கு கேப்டனாக செயல்பட்டார். இதில் 2020-ம் ஆண்டு ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டி வரை டெல்லி அணியை செய்ய அழைத்துச் சென்றார்.
இந்த சூழலில் திடீரென அவருக்கு தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. அதனால் 2021-ம் ஆண்டு நடந்த ஐபிஎல் தொடரின் முதல் பாதியில் அவர் விளையாடவில்லை. அதனால் அவருக்கு பதிலாக விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் டெல்லி அணிக்கு கேப்டனாக நியமிக்கப்பட்டார். காயம் குணமடைந்து அணிக்கு திரும்பிய போதும் ரிஷப் பந்தே கேப்டனாக தொடர்ந்தார்.
இந்த சூழலில் ரிஷப் பந்த், அக்சர் படேல், பிரித்வி ஷா மற்றும் அன்ரிச் நார்ட்ஜே ஆகிய 4 வீரர்களை டெல்லி கேப்பிடல் அணி தக்கவைத்தது. இதில் ஸ்ரேயாஸ் ஐயர் தக்கவைக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவரை டெல்லி அணி விடுவித்தது. அதனால் மெகா ஐபிஎல் ஏலத்தில் ஸ்ரேயாஸ் ஐயர் பங்கேற்க உள்ளார். இதனை பயன்படுத்தி அவரை ஏலத்தில் எடுத்து கேப்டனாக நியமிக்க பெங்களூர் அணி முனைப்பு காட்டி வருவதாக தகவல் கசிந்துள்ளது.

மற்ற செய்திகள்
