சரியா ‘வாய்ப்பு’ கிடைக்கல.. திடீரென ஓய்வை அறிவித்து ‘அமெரிக்கா’-க்கு விளையாட பறந்த SRH வீரர்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுசன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் முன்னாள் வீரர் திடீரென ஓய்வு அறிவித்துள்ளார்.

சண்டிகர் மாநிலத்தைச் சேர்ந்தவர் கிரிக்கெட் வீரர் பிபுல் சர்மா (வயது 38). இவர் மொத்தம் 59 உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி 3012 ரன்களும், 126 விக்கெட்டுகளையும் எடுத்துள்ளார். அதேபோல் 105 டி20 போட்டிகளில் விளையாடி 84 விக்கெட்டுகளையும், 1203 ரன்களையும் எடுத்துள்ளார்.
மேலும் ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் சார்பாக விளையாடி இருக்கிறார். கடந்த 2016-ம் ஆண்டு நடந்த ஐபிஎல் தொடரில் சாம்பியன் பட்டத்தை வென்ற ஹைதராபாத் அணியில் பிபுல் சர்மாவும் இடம்பெற்றிருந்தார். ஆனால் இதனை அடுத்து அவருக்கு சரியாக வாய்ப்பு கிடைக்கவில்லை.
இந்த நிலையில் திடீரென இந்திய கிரிக்கெட்டில் இருந்து பிபுல் சர்மா ஓய்வை அறிவித்துள்ளார். இதனை அடுத்து அமெரிக்கா சென்று அங்கு கிரிக்கெட் போட்டிகளில் விளையாட உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இதேபோல் பல வீரர்கள் இந்திய அணியில் விளையாட வாய்ப்பு கிடைக்காமல் அமெரிக்கா சென்று விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்
