இது யாருமே எதிர்பார்க்காத ‘ஷாக்’.. ஐபிஎல் வரலாற்றிலேயே அதிக விலைக்கு ‘ஏலம்’ போன வீரர் திடீர் ஓய்வு.. அதிர்ச்சியில் ரசிகர்கள்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஐபிஎல் ஏலத்தில் மிகவும் அதிக தொகைக்கு ஏலம் போன வீரர் திடீரென அனைத்து விதமான கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெற்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் முக்கிய வீரராக வலம் வந்தவர் கிறிஸ் மோரிஸ். கடந்த 2013-ம் ஆண்டு தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணியில் அறிமுகமான இவர், 3 வடிவ கிரிக்கெட் போட்டிகளிலும் சேர்த்து 69 போட்டிகளில் விளையாடியுள்ளார். அதில் 774 ரன்களும், 94 விக்கெட்டுகளையும் எடுத்துள்ளார்.
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் குறைவாகவே விளையாடி இருந்தாலும், ஐபிஎல் தொடரில் இவருக்கு மவுசு அதிகமாக இருந்தது. 2021-ம் ஆண்டு நடந்த ஐபிஎல் தொடருக்கான ஏலத்தில் அனைத்து அணிகளும் இவரை ஏலத்தில் எடுக்க போட்டி போட்டன. கடைசியாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 16.25 கோடி ரூபாய்க்கு இவரை ஏலத்தில் எடுத்தது. ஐபிஎல் வரலாற்றிலேயே அதிக தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்ட வீரர் என்ற பெருமையை கிறிஸ் மோரிஸ் பெற்றார்.
இந்த நிலையில் அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக கிறிஸ் மோரிஸ் அறிவித்துள்ளார். இதுகுறித்து டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள அவர், ‘அனைத்து வடிவ கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுகிறேன். என்னுடன் அதிக போட்டிகளில் விளையாடியவர்களாக இருந்தாலும் சரி குறைந்த போட்டிகளில் விளையாடியவர்களாக இருந்தாலும் சரி அனைவருக்கும் நன்றி’ என குறிப்பிட்டுள்ளார்.
ஓய்வுக்கு பின் தென் ஆப்பிரிக்காவில் உள்ள உள்நாட்டு கிரிக்கெட் அணியான டைட்டான்ஸுக்கு பவுலிங் பயிற்சியாளராக செயல்பட போவதாக கிறிஸ் மோரிஸ் தெரிவித்துள்ளார். இதனால் ஐபிஎல் தொடரிலும் ஏதாவது ஒரு அணிக்கு பயிற்சியாளராக இவர் வர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
இந்த ஆண்டு முதல் ஐபிஎல் தொடரில் 2 புதிய அணிகள் இணைய உள்ளன. அதனால் அனைத்து அணியிலும் உள்ள வீரர்கள் கலைக்கப்பட்டு மெகா ஐபிஎல் ஏலம் நடைபெற உள்ளது. இந்த சூழலில் கிறிஸ் மோரிஸ் ஓய்வு பெறுவதாக அறிவித்தது ஐபிஎல் அணிகளுக்கு அதிர்ச்சியாக அமைந்துள்ளது.