Veetla Vishesham Others Page USA

"உலகத்துக்கு உன்னை வரவேற்கிறேன்".. முதன்முறையாக தனது மகனின் புகைப்படத்தை உருக்கமான பதிவுடன் வெளியிட்ட யுவராஜ் சிங்.. வாழ்த்துக்களால் நிறையும் இணையம்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Madhavan P | Jun 20, 2022 01:50 PM

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான யுவராஜ் சிங் முதன்முறையாக தனது மகனின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதனையடுத்து கிரிக்கெட் ரசிகர்கள் யுவராஜ் மற்றும் அவரது மனைவி ஹாசல் கீச்-ற்கு சமூக வலை தளங்கள் வாயிலாக வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Yuvraj Singh reveals name, face of his child with heartfelt post

Also Read | திடீர்னு வானத்துல தோன்றிய சுழல் வடிவம்.. "ஒருவேளை ஏலியன்களின் பாதையா இருக்குமோ?" குழம்பிப்போன மக்கள்.. விஞ்ஞானிகள் சொல்லிய வியக்கவைக்கும் காரணம்..!

காதல் திருமணம்

இந்திய அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டராக திகழ்ந்தவர் யுவராஜ் சிங். இவர் நடிகையும் மாடலுமான ஹாஸல் கீச்-ஐ காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிக்கு கடந்த ஜனவரி மாதம் ஆண் குழந்தை பிறந்தது. இருப்பினும் தனிப்பட்ட காரணங்களினால் குழந்தையின் புகைப்படத்தை பின்னர் வெளியிட இருப்பதாக அறிவித்திருந்தார்கள் இந்த தம்பதியினர். இந்நிலையில் தந்தையர் தினமான நேற்று (ஜூன் 19) தங்களது மகனின் புகைப்படத்தையும், குழந்தைக்கு சூட்டப்பட்ட பெயரையும் வெளியிட்டுள்ளனர் யுவராஜ் - ஹாஸல் கீச் தம்பதியினர்.

உலகத்துக்கு உன்னை வரவேற்கிறேன்

இந்நிலையில், தந்தையர் தினத்தை முன்னிட்டு யுவராஜ் சிங் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில்,"உலகத்திற்கு ஓரியன் கீச் சிங்-ஐ வரவேற்கிறேன். தாயும் தந்தையும் தங்களது மகனை மிகவும் விரும்புகிறார்கள். நட்சத்திரங்களுக்கிடையில் உனது பெயர் எழுதப்பட்டிருப்பதைப் போல உனது கண்கள் ஒவ்வொரு புன்னகையிலும் ஒளிரட்டும்" எனக் குறிப்பிட்டுள்ளார். இதனுடன் தனது மனைவி மற்றும் மகனுடன் தான் இருக்கும் புகைப்படத்தை யுவராஜ் சிங் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Yuvraj Singh reveals name, face of his child with heartfelt post

பெயர் காரணம்

தங்களது மகனுக்கு இந்த பெயரை தேர்ந்தெடுத்ததற்கான காரணம் குறித்து பேசிய யுவராஜ் சிங்," ஹாஸலின் கடைசி பெயரும் குழந்தையின் பெயரில் இருக்க வேண்டும் என விரும்பினேன். ஹாஸல் மருத்துவமனையில் ஒருநாள் உறங்கிக்கொண்டிருந்த போது, நான் சில சீரியஸ்களை பார்த்தேன். அப்போதுதான் இந்த பெயர் எனக்கு தோன்றியது. ஓரியன் என்பது நட்சத்திர மண்டலம். ஒவ்வொரு பெற்றோருக்கும் தங்களது மகன் ஒரு நட்சத்திரம் தான். ஆகவே இந்த பெயரை பற்றி எனது மனைவிடம் சொன்னேன். அவருக்கும் இது பிடித்திருந்தது" என்றார்.

இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரான யுவராஜ் சிங் தனது மகனின் புகைப்படத்தை முதன்முதலில் வெளியிட, சமூக வலைத்தளங்களில் இப்புகைப்படம் தற்போது வைரலாக பரவி வருகிறது.

Also Read | என்ன இப்படி கிளம்பிட்டாங்க..ஊழியர் கொடுத்த வித்தியாசமான ராஜினாமா கடிதம்.."சீரியஸான பிரச்சனை இது" எச்சரிக்கும் தொழிலதிபர்..!

Tags : #YUVRAJ SINGH #YUVRAJ SINGH WITH HIS CHILD #YUVRAJ SINGH REVEALS HIS CHILD NAME

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Yuvraj Singh reveals name, face of his child with heartfelt post | Sports News.