'யுவராஜ் சிங்' அடித்த 6 'சிக்ஸர்'.. "அந்த ஓவருக்கு முன்னாடி, 'பிளிண்டாஃப்' என்ன பாத்து 'வெறுப்புல' ஒரு 'விஷயம்' சொன்னாரு.." பின்னணியிலுள்ள 'கோபம்'!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுகிரிக்கெட் உலகில், ஒரே ஓவரில் 6 சிக்ஸர்களை சில வீரர்கள் மட்டுமே அடித்துள்ள நிலையில், இதன் முதல் பெயராக அனைவரின் மனதிலும் வருவது யுவராஜ் சிங் (Yuvraj Singh) அடித்த ஆறு சிக்ஸர்கள் தான்.

கடந்த 2007 ஆம் ஆண்டு நடைபெற்ற முதல் டி 20 உலக கோப்பைத் தொடரில், இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில், ஸ்டூவர்ட் பிராட் வீசிய ஒரே ஓவரில் 6 சிக்ஸர்கள் அடித்த யுவராஜ் சிங், 12 பந்தில் அரை சதமடித்த சாதனையையும் அவர் படைத்திருந்தார். பிராடின் ஓவரில், ஆறு சிக்ஸர்கள் அடிப்பதற்கு முன்பாக, இங்கிலாந்து வீரர் ஆண்ட்ரூ பிளிண்டாப்புடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருந்தார் யுவராஜ் சிங்.
இதனால், கோபத்தின் உச்சத்திற்கே சென்ற யுவராஜ் சிங், அடுத்த ஓவரை போட்டு பொளந்துக் கட்டினார். இந்நிலையில், அந்த ஓவருக்கு முன்பாக, பிளிண்டாப்புடன் நடந்த சண்டை பற்றி, நிகழ்ச்சி ஒன்றில், யுவராஜ் சிங் விவரித்துள்ளார். அதில் பேசிய யுவராஜ் சிங், 'பிளிண்டாப் (Flintoff) ஓவரில் நான் 2 பவுண்டரிகளை அடித்ததால், அவர் மிகவும் கடுப்பானார். அதற்காக, அவர் என்னிடம் ஏதோ கூறினார். நான் பதிலுக்கு எதையோ கூறினேன். அவர் என்னிடம், "இங்கே வா, உனது கழுத்தை நான் திருகித் தருகிறேன்"என்றார். அதற்கு நானும், "எனது பேட் எங்கெல்லாம் போகும் என்பது உங்களுக்கும் தெரியும்" என கூறினேன்.
மிகவும் சீரியஸான சண்டையாக இருந்தது. அந்த சமயத்தில், ஒவ்வொரு பந்தையும் மைதானத்திற்கு வெளியே அடிக்க வேண்டும் என்ற ஆத்திரம் தான் எனக்குள் உருவானது. பிராட் வீசிய முதல் பந்து, மைதானத்திற்கு வெளியே சென்றது. 2 ஆவது பந்து, ரசிகர்கள் மத்தியில் சென்று விழுந்தது. மூன்றாவது பந்தை, நான் பாய்ண்ட் திசையில் அடித்தேன். எனது வாழ்நாளில், நான் அங்கு பவுண்டரியே அடித்ததில்லை.
அதன் பிறகு, காலிங்வுட் வந்து பிராடிடம், ஆஃப் ஸ்டம்பிற்கு வெளியே யார்க்கர் போடச் சொன்னார். ஆனால், பிராட் எனது கால்களில் வீசினார். ஐந்தாவது பந்து, பேட்டின் விளிம்பில் பட்டு, பிளிண்டாப் தலைக்கு மேல் சிறிய சிக்ஸாக சென்றது.
ஆறாவது பந்தை நிச்சயம் யார்க்கராக வீசுவார் என எனக்குத் தெரியும். எனவே, அதனை நேராக அடிக்க முடிவு செய்தேன். கடைசி சிக்ஸரை அடித்து முடித்து விட்டு, பிளிண்டாப்பை பார்த்து குறும்பாக சிரித்தேன்' என யுவராஜ் சிங் தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்
