"நாளைக்கி மேட்ச்'ல.." கங்குலி கேட்ட கேள்வி.. இரவு முழுவதும் தூங்காமல் தவித்த யுவராஜ் சிங்..

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Ajith Kumar V | Apr 30, 2022 03:36 PM

இந்திய அணி கண்ட வீரர்களில் மிக மிக முக்கியம் ஆனவர் யுவராஜ் சிங். 2007 டி 20 உலக கோப்பை மற்றும் 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐம்பது ஓவர் உலக கோப்பை என இரண்டையும் இந்திய அணி வென்றிருந்தது.

yuvraj singh about ganguly question before debut innings

இந்த இரண்டையும் இந்திய அணி வெல்ல முக்கிய காரணமாக இருந்தவர் யுவராஜ் சிங். 2011 ஆம் ஆண்டு உலக கோப்பை போட்டியில், தொடர் நாயகன் விருதினையும் யுவராஜ் சிங் வென்றிருந்தார்.

இந்திய அணியின் சிறந்த வீரர்களில் ஒருவராக வலம் வந்த யுவராஜ் சிங், 2000 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐசிசி நாக் அவுட் தொடரில், கென்யாவுக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் அறிமுகமாகி இருந்தார்.

தூக்கம் தொலைத்த யுவராஜ் சிங்

இந்த தொடரை கங்குலி தலைமையிலான இந்திய அணி, இறுதி போட்டியில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி கோப்பையைக் கைப்பற்றி அசத்தி இருந்தது. தன்னுடைய அறிமுக தொடரின் போது, கேப்டன் கங்குலி தன்னிடம் கேட்ட கேள்வி பற்றியும், அதன் பிறகு அன்றிரவு முழுவதும் தான் தூக்கம் தொலைத்த கதை பற்றியும், யுவராஜ் சிங் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியின் போது தெரிவித்துள்ளார்.

yuvraj singh about ganguly question before debut innings

கங்குலி கேட்ட கேள்வி

"நாளைய போட்டியில் நீ தொடக்க வீரராக களமிறங்குகிறாயா என கங்குலி என்னிடம் கேட்டார். ஒரு நிமிடம் அப்படியே நான் உறைந்து போனேன். தொடக்க வீரராக நான் களமிறங்க நீங்கள் விரும்பினால், நான் களமிறங்குகிறேன் என அவரிடம் கூறினேன். தொடக்க வீரராக போவதால் அதன் பின்னர், அன்றிரவு முழுவதும் நான் தூங்கவே இல்லை" என தெரிவித்தார். ஆனால், மறுநாள் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில், யுவராஜ் சிங் 5 ஆவது வீரராக தான் களமிறங்கி இருந்தார்.

yuvraj singh about ganguly question before debut innings

புதிய வீரரிடம் கங்குலி Prank செய்து அவரின் மனநிலையை அறிந்து கொள்ள வேண்டி தான் அப்படி செய்தார் என யுவராஜிற்கு பின்னர் தெரிந்தது. கென்யா அணிக்கு எதிரான அறிமுக போட்டியில் யுவராஜ் சிங்கிற்கு பேட்டிங் செய்ய வாய்ப்பு கிடைக்கவில்லை. தொடர்ந்து, ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியில் தான் யுவராஜ்  சிங் பேட்டிங் செய்தார்.

முதல் போட்டியில் அதிரடி

இந்த போட்டியில், இந்திய அணி 265 ரன்கள் எடுத்திருந்தது. யுவராஜ் சிங் அதிகபட்சமாக 84 ரன்கள் எடுத்திருந்தார். தொடர்ந்து, ஆடிய ஆஸ்திரேலிய அணி, 245 ரன்கள் மட்டுமே எடுக்க, இந்திய அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது.

yuvraj singh about ganguly question before debut innings

இந்த போட்டியில் முதல் முறையாக பேட்டிங் செய்தது பற்றி பேசிய யுவராஜ் சிங், "ஐந்தாவதாக நான் பேட்டிங் செய்ய சென்ற போது, மிகவும் பதற்றத்துடன் இருந்தேன். ஆனால், பேட்டிங் செய்ய ஆரம்பித்ததும் சென்ற போது கவனம் முழுக்க பந்தின் மீது திரும்பியது. அன்று நான் 37 ரன்கள் அடித்திருந்தாலும், மிகுந்த மகிழ்ச்சி அடைந்திருப்பேன். ஏனென்றால், நான் எதிர்கொண்ட பந்து வீச்சு தாக்குதல் அப்படி இருந்தது" என தெரிவித்துள்ளார்.

8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.

நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க்.. https://behindwoods.com/bgm8

Tags : #YUVRAJ SINGH #SOURAV GANGULY #IND VS AUS #யுவராஜ் சிங் #கங்குலி

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Yuvraj singh about ganguly question before debut innings | Sports News.