"அம்மாடியோவ்.. இப்டி ஒரு ரன் அவுட்'ட பாத்ததே இல்ல.." பேர்ஸ்டோவின் மிரட்டலான 'THROW'.. உறைந்து போன கிரிக்கெட் ரசிகர்கள்
முகப்பு > செய்திகள் > விளையாட்டு15 ஆவது ஐபிஎல் தொடரின் ஒவ்வொரு போட்டிகளும் மிக மிக விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது.
அடுத்தடுத்த போட்டிகளில் தோல்வி பெறும் அணிகளுக்கு பிளே ஆப் சிக்கலாகும் என்பதால், ஒவ்வொரு அணியும் மிக கவனமாக ஆடி வருகிறது.
பத்து அணிகளில் இருந்து, எந்த அணிகள் ஐபிஎல் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும் என்பதை அறிந்து கொள்ளவும் ரசிகர்கள் ஆவலாக உள்ளனர்.
இலக்கை நிர்ணயித்த லக்னோ
அந்த வகையில், இன்று (29.04.2022) நடைபெற்று வரும் போட்டியில், பஞ்சாப் கிங்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிகள் மோதி வருகிறது. கடந்த ஆண்டு பஞ்சாப் அணியை தலைமை தாங்கி இருந்த கே எல் ராகுல், இந்த முறை லக்னோ அணியின் கேப்டனாக செயல்பட்டு வருகிறார். அதே போல, பஞ்சாப் அணியின் கேப்டனாக இந்த முறை ராகுலின் நெருங்கிய நண்பரான மயங்க் அகர்வால் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த போட்டியில், டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் மயங்க் அகர்வால், பந்து வீச்சைத் தேர்வு செய்தார். அதன்படி, ஆடிய லக்னோ அணியில், ராகுல் 6 ரன்களில் அவுட்டாக, அதன் பின்னர் கைகோர்த்த டி காக் மற்றும் தீபக் ஹூடா ஆகியோர், சிறப்பாக ஆடி ரன் சேர்த்தனர். டி காக் 46 ரன்களும், தீபக் ஹூடா 34 ரன்களும் எடுத்து அவுட்டாக, லக்னோ அணியின் விக்கெட்டுகள் மளமளவென சரிந்தது.
பெரிய ஸ்கோரை அடிக்கும் என கருதிய லக்னோ, 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 153 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. பஞ்சாப் அணி தரப்பில், அதிகபட்சமாக ரபாடா 4 விக்கெட்டுகளை அள்ளி இருந்தார். தொடர்ந்து, இலக்கை நோக்கி தற்போது பஞ்சாப் அணி பேட்டிங் செய்து வருகிறது.
மிரள வைத்த ரன் அவுட்..
இந்நிலையில், இந்த போட்டியில் நிகழ்ந்த ரன் அவுட், தற்போது மிக பெரிய அளவில் பேசு பொருளாக மாறி உள்ளது. லக்னோ அணி பேட்டிங் செய்து கொண்டிருந்த போது, 14 ஆவது ஓவரை அர்ஷ்தீப் சிங் வீசினார். அப்போது, பந்தினை எதிர்கொண்ட க்ருனால் பாண்டியா, ஸ்கொயர் லெக் பகுதியில் அடித்தார். இதனால், எளிதாக இரண்டு ரன்கள் ஓடி விடலாம் என க்ருனால் மற்றும் அவருடன் களத்தில் இருந்த தீபக் ஹூடா கருதினர்.
பேர்ஸ்டோவின் மிரட்டல் 'Throw'
அப்போது, டீப் பகுதியில் பந்தினை பிடித்த பேர்ஸ்டோ, நான் ஸ்ட்ரைக்கர் பகுதியில் வேகமாக வீசினார். அப்போது, அதிர்ஷ்டவசமாக நேரடியாக ஸ்டம்பில் பந்து பட, ரன் அவுட்டாகவும் மாறி இருந்தது. இதனால், தீபக் ஹூடாவின் விக்கெட்டும் பறி போனது. சுமார் 60 மீட்டர் தொலைவில் இருந்து, நேராக ஸ்டம்பை நோக்கி வீசிய பேர்ஸ்டோவைக் கண்டு பலரும் மிரண்டு போயுள்ளனர்.
இது தொடர்பாக, வியப்பில் ஆழ்ந்துள்ள கிரிக்கெட் ரசிகர்கள், இணையத்தில் பேர்ஸ்டோவின் ரன் அவுட் தொடர்பான வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை பகிர்ந்து வருகின்றனர்.
8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க்.. https://behindwoods.com/bgm8