ஐபிஎல் போட்டியின் ஆல்டைம் சிறந்த லெவன்.. முன்னாள் வீரரின் அசத்தல் தேர்வு.. அட, கேப்டன் இவரு தானா?
முகப்பு > செய்திகள் > விளையாட்டுநடப்பு ஐபிஎல் சீசன் மிகவும் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில், இந்திய அணியின் முன்னாள் வீரரான முகமது கைஃப், ஐபிஎல்லில் தன்னுடைய ஆல் டைம் சிறந்த லெவனை தேர்வு செய்துள்ளார்.
15 ஆவது ஐபிஎல் தொடரில், குஜராத் டைட்டன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் ஆகிய இரண்டு அணிகள் புதிதாக இணைந்துள்ளதால், மொத்தம் 10 அணிகள் ஐபிஎல் தொடரில் பங்கேற்று வருகிறது.
பாதிக்கும் மேற்பட்ட லீக் போட்டிகள் முடிவடைந்துள்ளதால், எந்தெந்த அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும் என்பது பற்றி, ரசிகர்கள் மற்றும் கிரிக்கெட் பிரபலங்கள் பலரும் தங்களின் கணிப்பினை தெரிவித்து வருகின்றனர்.
அதே போல, அனைத்து அணிகளும் தங்களின் வெற்றிக்கு வேண்டி போராடி வருவதால், லீக் போட்டிகள் மிகுந்த விறுவிறுப்புடன் சென்று கொண்டிருக்கிறது. இந்நிலையில், இந்திய அணியின் முன்னாள் வீரர் முகமது கைஃப், ஐபிஎல்லில் ஆல்டைம் சிறந்த லெவன் யார் என்பதை தெரிவித்துள்ளார்.
கைஃப் தேர்வு செய்த ஐபிஎல் பெஸ்ட் லெவன்
அவரது லெவனில் மொத்தம் ஆறு வெளிநாட்டு வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். தன்னுடைய அணியின் தொடக்க வீரர்களாக அதிரடி வீரர்கள் கிறிஸ் கெயில் மற்றும் ரோஹித் ஷர்மாவை தேர்வு செய்துள்ளார். இதற்கு அடுத்தபடியாக, மூன்றாம் இடத்தில் விராட் கோலியை தேர்வு செய்துள்ளார் கைஃப்.
"ஐபிஎல் தொடரில் கெயில் மிகவும் ஆபத்தான வீரர். அவர் சிறப்பாக ஆடும் போதெல்லாம், நிறைய ரன்களைக் குவித்து, போட்டியின் முடிவையும் மாற்றி விடுவார். அதே போல, பல ஆண்டுகளாக ஆடி வரும் ரோஹித், தனது அணிக்காக ஐந்து முறை கோப்பையை கைப்பற்றி உள்ளார். மேலும், விராட் கோலியும் ஐபிஎல் தொடரில் நிறைய ரன்களை அடித்துள்ளார்" என கைஃப் தெரிவித்துள்ளார்.
மிடில் ஆர்டர்'ல யார் இருக்காங்க??
தொடர்ந்து, மிடில் ஆர்டர் வரிசையில் சுரேஷ் ரெய்னா, ஏபி டிவில்லியர்ஸ் மற்றும் தோனி ஆகியோரைத் தேர்வு செய்துள்ளார். இதன் பின்னர், ஆல் ரவுண்டர் மற்றும் பந்து வீச்சு வரிசையில், ஆண்ட்ரே ரசல், ரஷீத் கான், சுனில் நரைன், ஜஸ்பிரித் பும்ரா மற்றும் லசித் மலிங்கா ஆகியோரை கைஃப் தேர்வு செய்துள்ளார். மேலும், ஐபிஎல்லின் ஆல் டைம் சிறந்த லெவன் அணிக்கு தோனியையும் கேப்டனாக கைஃப் தேர்வு செய்துள்ளார்.
கேப்டன் தோனி தான்..
"2007 ஆம் ஆண்டு, டி 20 உலக கோப்பையை வென்று, இந்தியாவில் டி 20 போட்டிகளுக்கு நல்ல ஒரு அடித்தளத்தை தோனி அமைத்துக் கொடுத்தார். நான்கு முறை ஐபிஎல் கோப்பையையும் அவரது தலைமையில் வென்று கொடுத்துள்ளார். அவர் டி 20-யில் சிறந்த வீரர் மற்றும் அனுபவம் வாய்ந்த கேப்டன்" என கைஃப் தெரிவித்துள்ளார்.
முகமது கைஃப் தேர்வு செய்த ஆல்டைம் பெஸ்ட் ஐபிஎல் லெவன் :
கிறிஸ் கெயில், ரோஹித் ஷர்மா, விராட் கோலி, சுரேஷ் ரெய்னா, டிவில்லியர்ஸ், தோனி (கேப்டன், விக்கெட் கீப்பர்), ஆண்ட்ரே ரசல், ரஷீத் கான், சுனில் நரைன், ஜஸ்ப்ரித் பும்ரா, லசித் மலிங்கா.
8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க்.. https://behindwoods.com/bgm8