'இங்கிலாந்து பிட்ச் 'இது' வேற ரகம்!.. பவுலர கவனிக்க 'தனி ஆள்' போடுங்க'!.. இஷாந்த் சர்மா அலெர்ட்!.. என்ன காரணம்?
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஉலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் தனது திட்டம் குறித்து இஷாந்த் சர்மா பேசியுள்ளார்.
இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதும் இந்த போட்டி வரும் ஜூன் 18ம் தேதி இங்கிலாந்தின் சவுத்தாம்ப்டன் நகரில் தொடங்கவுள்ளது. இதற்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், பிட்ச் குறித்தும் ஆராயந்து வருகின்றனர். இங்கிலாந்து களத்தில் பேட்டிங்கை விட பவுலிங் தான் முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. அதுவும் குறிப்பாக வேகப்பந்துவீச்சாளர்களுக்கு நல்ல பலன் கொடுக்க கூடிய ஒன்றாக உள்ளது.
இந்திய பிட்ச்சுகள் போல இல்லாமல் பந்தில் நல்ல ஸ்விங் மற்றும் வேகம் இருக்கும் எனக் கூறப்படுகிறது. இங்கு வழக்கமாக பந்து நல்ல ஸ்விங் ஆக வேண்டும் என்பதற்காக வீரர்கள் எச்சில் தடவுவார்கள். ஆனால், அதற்கு ஐசிசி தடைவிதித்துள்ளது. இதன் காரணமாக நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் ஸ்விங் குறித்த சந்தேகம் எழுந்துள்ளது.
இந்நிலையில், இதுகுறித்து பேசிய இஷாந்த் சர்மா, எச்சில் தடவவில்லை என்றால் பெரியளவில் ஒன்றும் சிரமம் இருக்காது. எச்சில் தடவா விட்டாலும் பந்து நன்கு ஸ்விங் ஆகும். ஆனால், யாரும் பந்தில் எச்சில் தடவாதவாறு ஒருவர் பொறுப்பேற்று பார்த்துக்கொள்ள வேண்டும். அப்போது பவுலர்களுக்கு விக்கெட் எடுப்பதற்கு சுலபமாக இருக்கும்.
இங்கிலாந்து பிட்ச்-ஐ புரிந்துக்கொண்டு விளையாட சற்று வித்தியாசமாக பயிற்சி மேற்கொள்ள வேண்டும். இந்தியாவை பொறுத்தவரை போட்டி தொடங்கி சில மணி நேரங்களுக்கு பிறகு தான் பந்து ரிவர்ஸ் ஸ்விங் ஆகும். ஆனால், இங்கிலாந்து ஆட்டம் முழுவதும் ஸ்விங் இருக்கும். எனவே, அதற்காக பந்துவீச்சில் மாற்றம் செய்துகொள்ள வேண்டும். அங்கு தற்போது பனி சற்று உள்ளது. எனவே, பிட்ச்-ல் வேகம் அதிகரிக்க சில சமயங்கள் எடுத்துக்கொள்ளும்" எனக்கூறியுள்ளார்.
இதற்கிடையே, இந்திய அணியில் பேட்டிங்கை விட பவுலிங் படையின் மீது அதிக எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. பும்ரா, முகமது ஷமி, இஷாந்த் சர்மா ஆகிய 3 நட்சத்திர வீரர்களும் 2019ம் ஆண்டுக்கு பிறகு தற்போது தான் ஒன்றிணைந்துள்ளனர். இதில் இஷாந்த் சர்மா 100 டெஸ்ட் போட்டிகளுக்கு மேல் விளையாடிய அனுபவ வீரராக உள்ளார். ஆனால், இவருக்கு பதிலாக முகமது சிராஜ் ப்ளேயிங் 11ல் இடம் பெற அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.